தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

 










தெரிஞ்சுக்கோ  - மொழி

ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம்.

இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது.

உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள்.

உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்  எழுத, பேச தேர்ச்சி உண்டு.

கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார்.

ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி.

விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்  ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள்.

12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.

 

கொடி

பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத்தில் இப்படி சீர்திருத்தம் நடைபெற்றது.

டென்மார்க்கின் தேசியக்கொடி எழுநூற ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டு, அப்படியே தொடர்கிறது.

பெல்ஸி நாட்டின் தேசியக்கொடியில் ஐம்பது இலைகள் வட்டமாக வைக்கப்பட்டிருக்கும்.  1950ஆம் ஆண்டு நாடு முப்பது ஆண்டுகள் போராட்டத்தின் பின்னர் சுதந்திரம் பெற்றதை தேசியக்கொடி குறிக்கிறது.

1777ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க தேசியக்கொடி இதுவரை 27 முறை மாற்றப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சிறிய கொடி, கனடா நாட்டின் தேசியக்கொடி ஆகும்.

மதம்

சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் ஐந்து பொருட்களை தங்களோடு எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  வெள்ளை உள்ளாடை, மர சீப்பு, குறுங்கத்தி, வெட்டப்படாத முடி, இரும்புக் காப்பு.

1455ஆம் ஆண்டு அச்சு எந்திரங்களைக் கொண்டு பைபிள் 48 நகல்கள் உருவாக்கப்பட்டன. இதுவே ஐரோப்பாவில் அச்சு எந்திரங்களைக்  கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நூல்.

ஜைனர்கள் என அழைக்கப்படும் ஜைன மதத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் உண்டு. இவர்கள் விண்வெளியில் இருந்து தோன்றியவர்கள் என்ற கருத்து கூறப்படுகிறது.

1844ஆம் ஆண்டு ஈரானில்(பெர்சியா) தோன்றிய பாகாய் ஃபைத் என்ற மதமே, இதுவரை உருவாக்கப்பட்ட மதங்களில் சற்று இளமையானது.

 ஜப்பானில் ஷின்டோ மதம் உருவாகி 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.

தாவோயிசத்தின் கொள்கைகள், அதன் ஆசிரியர்களான லாவோஸி, ஸூவாங்க்ஸி  ஆகிய ஆசிரியர்களின் கற்பித்தலை அடிப்படையாக கொண்டது.

our world in numbers

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்