தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

 








தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

காட்டுவிலங்குகளில் அதாவது நிலத்தில் வேட்டையாடுவதில் சிறந்தவை பூனைக்குடும்ப விலங்குகள்தான். சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா ஆகியவை வலிமையும் அபாரமான வேட்டைத்திறனும் கொண்டவை.

காட்டில் வாழும் சிங்கத்தின் ஆயுள் 13-15 ஆண்டுகளாகும்.

சிங்கத்தின் கர்ஜனை முழக்கம் 5-8 கி.மீ தொலைவு வரை கேட்கும்.

 பனிச்சிறுத்தை, 5,859 மீட்டர் உயரத்தில் வாழக்கூடிய திறன் பெற்றது.

இரவில் வேட்டையாடும் புலியின கண்பார்வை திறன், மனிதர்களை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது.

அமெரிக்காவில் வாழும் பூனை குடும்ப விலங்குகளில் பெரியது ஜாகுவார்தான். 1.7 மீட்டர் நீளத்தில், 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

இரவில் உணவுக்காக மட்டும் ஜாகுவார் பத்து கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது.

ஜாகுவாரின் குட்டிகள் பிறக்கையில் கண்பார்வை இல்லாமல் பிறந்து, பதினான்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கும் திறன் பெறுகின்றன. பூனை குடும்ப விலங்குகளில் இது பொதுவான அம்சம்.

புலிகளில் ஒன்பது துணைப்பிரிவுகள் உள்ளன. பலி, காஸ்பியன், ஜாவன் ஆகிய பிரிவுகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பில் உள்ளன.

கடந்த 150 ஆண்டுகளில் புலிகள் வாழும் காட்டுப்பகுதி 96 சதவீதம் குறைந்துவிட்டது.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

image - devian art

கருத்துகள்