விநோதரச மஞ்சரி - புயல்

 







விநோத ரச மஞ்சரி

புயல்களுக்கு யார் பெயர் வைத்தது என கேட்கத் தோன்றும் அளவுக்கு பல்வேறு பெயர்களை உலக நாடுகள் சூட்டி வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி டிரெண்டிங்கை தொடங்கினார்.

அமெரிக்காவில் 1950களில் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியது. அடுத்து, இதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி ரோக்ஸி போல்டன் போராடினார். எனவே, அவருக்காக 1979ஆம் ஆண்டில் இருந்து புயல்களுக்கு பெண்களின் பெயரும் வைக்கப்படத் தொடங்கியது.

உலக வானிலை அமைப்பு, புயல்களுக்கான பெயர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறது. இந்த பட்டியல் நம்மூரில் உள்ள அ, ஆ, இ, ஈ போல அந்த ஊரில் ஏ,பி,சி, டி என வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. மொத்தம் 21 பெயர்கள் இடம்பெறும். க்யூ, யூ, ஒய், இசட் ஆகிய ஆங்கில எழுத்துகள் விலக்கப்பட்டன. இந்த பெயர்கள் 2020,2021 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன.

ஆலங்கட்டி மழை  பெய்வது வீட்டில் கல் எறிவது போல இருக்கும். இதே வகையில் நாய், பூனை, தவளை ஆகியவை புயலில் வானில் இருந்து பொழிவதுண்டு. இன்னொரு இடத்திலிருந்து எடுக்கப்பட்டு மற்றொரு இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. வீசப்படுகிறது. சேரி மக்களை அரசு, நகர அழகுக்காக கட்டாய இடமாற்றம் செய்து புறநகரில் வீசி எறிகிறதே அதுபோலக்கூட வைத்துக்கொள்ளலாம்.

வானிலையை விலங்குகள், பறவைகள் முன்னமே கணிக்கிறது என சில வருமுன்உரைப்போர் கூறி வருகிறார்கள். ஆனால் அது அறிவியல் ரீதியான கூற்று அல்ல. மழை வருவதற்கு முன்னர் பசுக்கள் படுப்பது, புயலுக்கு முன் பறவைகள் வானில் தாழப்பறப்பது ஆகியவற்றை சிலர் எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். கடலில் பருவகால புயல் உருவாகும்போது சுறாக்கள் கடலின் ஆழமாக பகுதிக்கு நீந்திச்செல்வது  உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் பனிப்புயல் வீசியது. இதன் விளைவாக மரங்களில் ஐஸ்கட்டிகள் படிந்து முப்பது மடங்காக அதன் எடையை கூட்டின. அடித்த பனிப்புயல் சக்தியால், மின்சார சேவையே சில மாதங்களுக்கு தடைபட்டுப்போனது.

இந்தளவு சீரியசாக விஷயங்களைப் பேசினால் நெஞ்சுவலி வரவும், வாதம் வரவும் வாய்ப்புள்ளது.  எனவே, இயற்கைப் பேரிடர் திரைப்படங்களைப் பார்ப்போம்.  தி பொசைடன் அட்வென்ச்சர், தி ஸ்வார்ம், ஹார்ட் ரெய்ன், அவலான்சே, ட்விஸ்டர் ஆகிய திரைப்படங்கள் இயற்கை பேரிடர் வகையில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றவை.

2021ஆம் ஆண்டு மங்கோலியாவின் தெற்குப் பகுதியான டோர்னோகோவியில்  இருபது மணி நேரம் மணல் புயல் வீசியது. பாலைவனத்தில் வீசும் வலிமையான காற்றால்  மணல் புயல் உருவாகிறது. இதுவே ரத்த மழையாக பெய்வதும் உண்டு. சகாரா பாலைவனத்தில் இருந்து பெறப்படும் மணலும், அதில் நீரும் இணைய ரத்தமழை உருவாகிறது. இந்த வகையில் 2022ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ரத்தமழை வீசியது.

வெப்ப அலை நாட்டின் இருப்புபாதைகள், மின்சார கம்பிகளை உருக்குகிறது. கூடவே, மனிதர்களின் உடலில் செரடோனின், டெஸ்டோஸ்ட்ரோன் ஆகிய வேதிப்பொருட்களை பெருக்குகிறது. இதனால் மனிதர்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஆசியா

 pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்