இடுகைகள்

காலப்பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொன்மைக்கால தென்கொரியாவில் புரட்சிகர கண்டுபிடிப்புகளை செய்யும் பட்டத்து இளவரசர்!

படம்
 பிளாக் கார்ப்பரேஷன் மாங்கா காமிக்ஸ் குன்மாங்கா.காம் தென்கொரிய காமிக்ஸ். இதில் மன்னர் ஜோசியன் காலத்திற்கு நவீன கண்டுபிடிப்பாளர் பயணிக்கிறார். இவர் படிப்பாளி அல்ல. ஆனால் கருவிகளை புதிதாக உருவாக்குபவர். மன்னர் காலத்திற்கு சென்று அங்கு செய்யும் பல்வேறு 21ஆம் நூற்றாண்டு பொருட்களால் அந்த நாடு வளர்வதே கதை. தொன்மைக்காலத்திற்கு சென்று அங்கில்லாத பொருட்களை உருவாக்குவது, அதை பரவலாக்குவது, அதை கன்பூசியவாதிகள் எதிர்ப்பது என கதை நகர்கிறது. இதில் கதாசிரியர் ஏராளமான முன்னோடிகளின் அறிவுரைகளை, பழமொழிகளை கையாண்டிருக்கிறார். இந்த கதையின் நாயகன் நவீன காலத்தில் முப்பது வயது கொண்டவனாகவும், தொன்மைக் காலத்திற்கு செல்லும்போது ஒன்பது வயது கொண்டவனாக இருக்கிறான். அந்த வயதிலேயே அவன் தனது புத்திசாலித்தனத்தால் மன்னர் சேஜோங்கிற்கு எப்படி உதவுகிறார். பேனா, துப்பாக்கி, வெடிகுண்டு, அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள், சின்னம்மை ஊசி என நிறைய விஷயங்கள் கதையில் வருகின்றன. அவை கதையில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. குறிப்பாக கதை நெடுக சாதி,மத, வர்க்க பேதம் நாட்டை முன்னேற்றாது என்று நாயகன் கூறிக்கொண்டே இருக்கிறார். மன்னர் சேஜ...

காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

படம்
                  ஆலிஸ் கொரிய தொடர் 16 எபிசோடுகள்     Genre: Science fiction, Romance Developed by: SBS TV Written by: Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong August 28 – October 24, 2020   டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொ ருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா ? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர் . காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை , தேடுதல் , கொலை , குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம் . ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் . இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள் , எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை . பார்க் ஜின் , காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி . இவரது மேலதிகாரி கோ . இவர்தான் அம்மா இறந்தபிறகு , பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார் . இதற்கு என்ன காரணம் என்று தேடினால் , 2010 க்கு கதை செல்கிறது . ...