இடுகைகள்

மணமுறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தம்பதிகள் ஒருவரையொருவர் ஏமாற்றுவது எதற்காக?

படம்
டாக்டர். எக்ஸ் pixabay வருகிற பஸ்ஸில் ஏறி குறிப்பிட்ட இடத்தில் இறங்கிக்கொள்வதுதானே நமது வாடிக்கை. திருமணம் கூட அப்படித்தான். குடும்ப அழுத்தம் காரணமாக பெண்ணை அல்லது ஆணை ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும், மனதிற்கு பிடித்தவர்கள் வெளியில் இருப்பார்கள். அவர்களை ஒருவர் தவிர்க்கவும் முடியாது. உங்களுக்கு ஒருவரோடு டீ, காபி குடிக்க பிடித்திருக்கிறது என்றால் அதில் தவறு என்ன? ஆனால் இதைப்பயன்படுத்தி பயன்களை அனுபவிப்பதில் ஆண்களே முன்நிற்கின்றனர். இதில் பொருளாதாரம் முன்னிலையில் உள்ளது. கிராமப்புறத்தில் கூலி வேலைக்கு பெண்கள் சென்று சம்பாதித்தாலும், பொருளாதாரக் கடிவாளம் ஆண்களில் கையில் இருக்கும். இம்முறையில் ஐந்து சதவீத பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றி, சல்லாபமாக இருக்கும் பெண்கள் எண்ணிக்கை 5 சதவீதம்தான். இதில் பொருளாதார சுதந்திரம் கொண்ட ஆண்கள் பச்சைக்கிளி போன்ற பெண்களுக்கு முத்துச்சரம் வாங்கிக்கொடுக்கும் அளவு 15 சதவீதத்திற்கும் அதிகம். பொருளாதாரத்திற்கு பெண்களை சார்ந்திருக்கும் ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவு. அப்படியிருக்கும் பெண்கள் பெருமளவில் மற்றொரு ஆண்துணையை நட்பு தாண்டி அணுகுவதில்லை. ஆனா