இடுகைகள்

சீர்திருத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாராளவாத சீர்திருத்த அம்சங்கள்!

படம்
  புதிய தாராளவாதத்தை சீர்திருத்த முடியுமா? (சுருக்கம்) ---  1. அறிமுகம்: சீர்திருத்தத்தின் அவசியம் புதிய தாராளவாத அரசாங்கங்கள் பொது செலவினம் மற்றும் ஒழுங்குமுறையில் அவ்வப்போது சமரசங்கள் செய்தாலும், அவை அதை தற்காலிக அரசியல் கட்டாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால், புதிய தாராளவாத மாதிரியே சுய-அழிவுப் பாதையில் செல்கிறது என்ற உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அவர்கள் உண்மையான சீர்திருத்தத்தை ஏற்கத் தயாராகுவார்கள். இங்கு முக்கிய கேள்வி: யார் இந்த சீர்திருத்தத்திற்கான மூலோபாய நடிகர்கள்? --- ### 2. நிறுவன புதிய தாராளவாதத்தின் மூலோபாய நடிகர்கள் மார்க்ஸும் எங்கெல்சும் கூறியது போல, "நவீன அரசின் நிர்வாகம் முதலாளித்துவத்தின் பொது விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு குழு மட்டுமே." ஆனால் இன்று முதலாளித்துவம் அந்த குழுவைக் கூட வைத்திருக்கும் திறனை இழந்துவிட்டது. **இரண்டு முக்கிய கேள்விகள்:** 1. **சந்தை மட்டுமேயா?** - மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளும் சந்தைக்குள் வர வேண்டுமா? இல்லையென்றால், சந்தைக்கு வெளியே உள்ளவை எவ்வாறு பாதுகாக்கப்படும்? 2. **நீண்ட கால இலக்குகள்:** புதிய தாராளவாதம் நீண்டகா...

புதிய தாராளவாத சீர்திருத்தம்

படம்
புதிய தாராளவாதத்தை சீர்திருத்த முடியுமா? --- புதிய தாராளவாதத்தால் ஈர்க்கப்பட்ட அரசாங்கங்கள் பொது செலவினம் மற்றும் ஒழுங்குமுறையுடன் எல்லா நேரத்திலும் சமரசங்களைச் செய்தாலும், அவை அவ்வாறு செய்வது அழுத்தமான, விரும்பத்தக்க தற்காலிக, அரசியல் யதார்த்தங்களின் விருப்பமில்லாத அங்கீகாரமாக மட்டுமே; அவற்றின் இயல்புநிலை விருப்பமான நிலைப்பாடு, அதன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, அரசாங்கத்தை முடிந்தவரை சிறியதாக மாற்றுவதாகும். 2014 இல் யுகேயில் உள்ள கன்சர்வேடிவ் அரசாங்கம் 1930 களின் பொது செலவின நிலைகளுக்கு - அதாவது, நவீன நல அரசின் கட்டுமானத்திற்கு முன் - திரும்புவதற்கான தனது உறுதிப்பாட்டை அறிவித்தது. அமெரிக்காவில், டிரம்ப் நிர்வாகம் 2008 ஐத் தொடர்ந்து நிதி நெருக்கடி மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க முயற்சியாக வைக்கப்பட்ட வங்கித் துறையின் ஒழுங்குமுறையை அவிழ்க்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில், நெருக்கடியைத் தொடர்ந்து, குறைந்த பதற்றமான குறுகிய கால வர்த்தகத்தைப் பின்தொடர்வதற்கான தங்கள் மாற்றத்தைப் பற்றி பெருமையுடன் அறிவித்த வங்கிகள், 2007 க்கு முந்தைய தங்கள் வணிக முறைகளுக்கு திரு...

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!

படம்
  ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்! ஷி ச்சின்பிங்  சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது.  இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது.  2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்...

சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்

சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது. மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை. சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது. மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திர...

தொன்மைக்கால தென்கொரியாவில் புரட்சிகர கண்டுபிடிப்புகளை செய்யும் பட்டத்து இளவரசர்!

படம்
 பிளாக் கார்ப்பரேஷன் மாங்கா காமிக்ஸ் குன்மாங்கா.காம் தென்கொரிய காமிக்ஸ். இதில் மன்னர் ஜோசியன் காலத்திற்கு நவீன கண்டுபிடிப்பாளர் பயணிக்கிறார். இவர் படிப்பாளி அல்ல. ஆனால் கருவிகளை புதிதாக உருவாக்குபவர். மன்னர் காலத்திற்கு சென்று அங்கு செய்யும் பல்வேறு 21ஆம் நூற்றாண்டு பொருட்களால் அந்த நாடு வளர்வதே கதை. தொன்மைக்காலத்திற்கு சென்று அங்கில்லாத பொருட்களை உருவாக்குவது, அதை பரவலாக்குவது, அதை கன்பூசியவாதிகள் எதிர்ப்பது என கதை நகர்கிறது. இதில் கதாசிரியர் ஏராளமான முன்னோடிகளின் அறிவுரைகளை, பழமொழிகளை கையாண்டிருக்கிறார். இந்த கதையின் நாயகன் நவீன காலத்தில் முப்பது வயது கொண்டவனாகவும், தொன்மைக் காலத்திற்கு செல்லும்போது ஒன்பது வயது கொண்டவனாக இருக்கிறான். அந்த வயதிலேயே அவன் தனது புத்திசாலித்தனத்தால் மன்னர் சேஜோங்கிற்கு எப்படி உதவுகிறார். பேனா, துப்பாக்கி, வெடிகுண்டு, அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள், சின்னம்மை ஊசி என நிறைய விஷயங்கள் கதையில் வருகின்றன. அவை கதையில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. குறிப்பாக கதை நெடுக சாதி,மத, வர்க்க பேதம் நாட்டை முன்னேற்றாது என்று நாயகன் கூறிக்கொண்டே இருக்கிறார். மன்னர் சேஜ...

அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?

படம்
  மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள் மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது.  அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து...

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின...