இடுகைகள்

பிளாக்செயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!

படம்
            பிட்காயினுக்கு அனுமதி எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது . உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார் . இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு . இது கட்டாயமல்ல . அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது . இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும் . டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும் . நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை . தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு . கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது

2021இல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன? சூழல், அலுவலகம், கல்வி

படம்
                      202 1 சூழல் மாற்றங்கள் சூழல் கட்டிடங்கள் பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன . இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும் . பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம் , குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது . இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது . உள்ளூர் சந்தை உள்நாட்டில் விளையும் காய்கறிகளை , உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம் . பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது . உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம் . நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம் . பசுமை முதலீடு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்