இடுகைகள்

நுகர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி

நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!

படம்
  நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்! உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.  மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.   வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவை எடுத்து