இடுகைகள்

எபோலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாரடைப்பு வந்தாலும் மக்களுக்கு சிகிச்சை செய்வேன்! - அர்ப்பணிப்பான கேரள மருத்துவரின் கொரோனா சாதனை!

படம்
            மருத்துவர் சந்தோஷ்(மஞ்சள் உடையில்)         சந்தோஷ்குமார் மருத்துவர் நோயாளியைத் தேடித்தான் மருத்துவர்கள் முன்னர் சென்று வந்தார்கள் . ஏன் தெரியுமா ? மருத்துவரை தேடி நோயாளிகள் அலைந்தால் அவர்களின் நோய் இன்னும் கூடுதலாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால்தான் . மருத்துவர் சந்தோஷ்குமார் தொற்றுநோ்ய் பாதிப்புள்ள சியரா லியோன் , போர் ஆபத்துள்ள சிரியா என எந்த இடத்திலும் தயக்கமே இல்லாமல் சென்று தனது மருத்துவச்சேவையை அளித்துள்ளார் . இருபது ஆண்டுகாலத்தில் நாற்பது நாடுகளுக்கு சென்று மருத்துவச் சேவையை அளித்துள்ளார் . கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக்கல்லூரியில் அவசரகால சிகிச்சைத் துறையின் டெபுடி சூப்பிரடெண்டாக பணியாற்றிவருகிறார் . இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது இவர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு எப்படி செயல்படுவது என்ற எந்த நூலும் பின்பற்றுவதற்கு கிடையாது . அனைத்துமே அனுபவ பாடங்களாக கற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சைய உயர்த்தியுள்ளனர் . மாநிலத்தின் முக்கியமான மருத்துவமனை , பல்வேறு அதிகாரிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும்

கொள்ளைநோய் கோவிட் -19 விதிகள் - சட்டத்தை கடைபிடிக்காத மத்திய அரசு

படம்
newslaundry ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் முதல் ஏராளமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்துள்ளது. இதற்கான விதிகளும் இயற்றப்பட்டு அச்சமயங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுவாக இப்பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பில்லை. காரணம் காய்ச்சலுக்கு சாகுபவர்களை விட கஞ்சிக்கு செத்தவர்கள் இங்கு அதிகம். அந்தளவு சோற்றுக்காக கஷ்டப்பட்டவர்கள். பசி, பட்டினி பாதிப்பு இந்தியாவில் அதிகம். அதற்காக நோய்களே வரவில்லை என்று கூற முடியாது. அதன் பாதிப்பு மிகவும் குறைவு. பிரிட்டிஷாரின் ஆட்சியில் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நடைமுறைக்கு வந்தது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்தபோது இக்கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர். இன்று இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 123 ஆண்டுகால சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றன. பொதுமக்களுக்கான சுகாதாரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் இயற்றப்பட்டன. இதில் நோய்களின் பாதிப்பு, அவர்களுக்கான சிகிச்சை