இடுகைகள்

ஆதரவற்றோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

படம்
  பைலிஸ் நோவக் ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்!  1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும்.  1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.  ”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  Picture this -Phyll

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப