இடுகைகள்

சோலார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பக்கத்திலே நரவலே கிடந்தாலும், அங்கேயே எலையைப் போட்டு சோறு திம்பேன் - ஒரே உலகம் ஒரே பாரதீயன்

படம்
இக்னோர் தி ட்ரூத் ஃபார் செல்ஃப் பெனிஃபிட்ஸ் என்ற வாக்கியம் மனதிற்குள் ஆழமாக ஒலிக்கத் தொடங்கியது. எங்கிருந்து இந்த வாக்கியம் தோன்றியது என யோசித்தாலும் எதுவும் உடனே நினைவுக்கு வரவில்லை. ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து கிலோமீட்டர் சென்றே தீர வேண்டும் என்ற லட்சியத்தை பேருந்து ஓட்டுநர் மனதில் கொண்டிருந்தார். எனவே, பேருந்தை ஏராளமான டிவிஎஸ் 50, ஸ்கூட்டிகள கூட முந்திக்கொண்டு சென்றன. பழனிக்கு கூட நாம் முன்னே நகருகிறோமா இல்லை நிற்கிறோமா என்று சந்தேகமாக இருந்தது. நல்லவேளை ஜன்னலில் காட்சிகள் மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருந்தன. பேருந்தில் மெல்ல மக்கள் கூட்டம் நிரம்பத் தொடங்கியது. பெண்களுக்கு இலவசம் என்பதால் நிறைய பெண்கள் ஏறுகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் கண்டக்டரின் முகம் ஏறும் பெண்களைப் பார்த்து நல்லவிதமாக யோசிக்கவில்லை. ‘’பொம்பளைங்களுக்கு இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க. முதல்ல மாதிரி யாரும் கரெக்ட்டா கையைக்காட்டி ஏறது இல்ல. அவிங்க பாட்டுக்கு சிரிச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க. பஸ்சு பக்கத்துல வந்ததும் ஏதோ எஸ்கேஎம் முட்டக்கம்பெனி வண்டி மாதிரி நிற்கும் கையைக்கூட பெருசா காட்டறதில்ல. ஏறுனாலும் சீட்

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

எலன் மஸ்க் - இந்த ஆண்டின் சிறந்த மனிதர் (2021)

படம்
  எலன் மஸ்க் எலன் மஸ்க், எல்லோருக்கும் பிடிக்கிற தொழிலதிபர் கிடையாது. சிலர் கோமாளி என்பார்கள், சிலர் ஜீனியஸ் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உயரத்துக்கு கொண்டு செல்பவர்களில் எலன் மஸ்கை தவிர்க்கவே முடியாது.  எலன் மஸ்க், ட்விட்டரில் போடும் பல்வேறு பதிவுகளை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவார்கள். கேலியாக, கிண்டலாக, மூர்க்கமாக என பலவிதங்களில் எழுதுவது உண்டு. கிரிப்டோகரன்சியை டெஸ்லா ஏற்கும் என்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் சும்மா என்று சொல்லி தனது தொழிற்சாலைகளை இயக்கப்போகிறோம் என்று அறிவித்தது, என பல்வேறு விஷயங்களில் எலன் வேற லெவல்தான். இந்தளவு நம்மூரில் யார் இருக்கிறார் என்று யோசித்தால் கொஞ்சம் அருகில் வருபவர் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மட்டுமே. இந்த கட்டுரை எலனின் நிறுவனங்களைப் பற்றி பேசும் பொறுப்பைக் கொண்டது. தொடங்கலாமா? பேபால்  ஆன்லைனில் பணம் கட்டும் சேவை 1.5 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்றார் எலன். எலன் தொடங்கிய இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனம் எக்ஸ்.காம். இது ஒரு ஆன்லைன் வங்கி. 1999ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தொடங்கியதுதான் பேபா

பிட்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்

படம்
பிட்ஸ்! ஜிம்மி கார்ட்டர்.. 1.முப்பத்தி ஒன்பதாவது  அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜியாவில் 1924 ஆம் ஆண்டு அக்.1 அன்று பிறந்தார். 2.கார்ட்டருக்கு சிறிய வயதிலிருந்து  கப்பல் மாலுமியாக பணியாற்றவே ஆசை. அக்கனவிற்காகவே அன்னபோலிஸ் கப்பல் பயிற்சி அகாதெமியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். அணு ஆயுதக் கப்பலில் பொறியியலாளராக பணியாற்றினார். 3.இருபத்து ஒன்பது வயதில் தந்தை திடீரென மரணமடைய, கப்பல் பணியை விட்டு வீடு திரும்பினார். கடையையும் நிலக்கடலைப் பண்ணையைப் பார்த்துக்கொண்டு வெற்றிகரமான வணிகரானார். 4.அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் வேலைகளைச் செய்துகொடுக்கும் பணியாளர்களுக்கு நன்றி சொல்லுவது, கார்ட்டரின் வழக்கம். 5.2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கார்ட்டர், அதிபராகும் முன்னர், ஜார்ஜியா செனட்டிலும், அதன் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 6. சிறுவயதில் தேவாலயத்தில் நன்கொடைக்காக வைத்திருந்த பணத்தைத் திருடிவிட்டார் கார்ட்டர். அதை அங்கேயே கண்டித்தார் அவரது தந்தை. வாழ்வை நல்வழிப்படுத்திய நல்ல நண்பர் என தன் தந்தையைக் குறிப்பிடுவார் கார்ட்டர். 7.