இடுகைகள்

இந்தியா- ஆயுஷ்மான் பாரத் திட்டம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயூஷ்மான் பாரத் திட்டம் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
அறிவோம் தெளிவோம் ! இந்திய அரசின் ஆரோக்கிய காப்பீட்டுத்திட்டமான ஆயுஸ்மான் பாரத் , உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் என்றாலும் நடைமுறையில் சிகிச்சை செலவு கட்டுப்பாட்டினால் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .   அறுபது சதவிகித மருத்துவமனைகளில் (60,000-70,000) 30 சதவிகித படுக்கைவசதிகள் மட்டுமே உள்ளது என்பது உலகவங்கியின் தகவல் . 3 ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே நூறு படுக்கைகள் கொண்டுள்ளன . விகிதம் 1:625. மத்திய அரசு 60 சதவிகிதமும் , மாநில அரசு 40 சதவிகிதமும் நிதியளிக்கும் திட்டப்படி 1,350 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் . மக்களுக்கான சுகாதாரத்திட்டத்தில் அரசின் செலவு 3.97%(2013), 1.15%(2017) என குறைந்து வருகிறது . தனிநபர் வருமானப்படி 69 டாலர் (2013), 58 டாலர் (2017) என செலவிட்டுள்ளது . மாநில அரசின் சுகாதாரத்திட்டங்களை முடக்கும் என வல்லுநர்கள் அச்சப்படும்   ரூ . 5 லட்சம் மதிப்புள்ள ஆயுஸ்மான் பாரத்தின் காப்பீட்டு பிரீமியத்தொகை ரூ .1,200 மட்டுமே .