இடுகைகள்

பேச்சுரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு

படம்
      அஞ்சலி ஏஜி நூரானி 1930-2024 காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர். கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார். குடிமகன்களின் உரிமை, பேச்சுரி...

திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!

படம்
            திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்! ஒன் இந்தியா, எஸ்எஸ் மியூசிக், பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளங்கள் போல சல்லித்தனமாக தலைப்பு அமைந்துவிட்டது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டெலிகிராமின் நிறுவனர், இயக்குநர் பாவெல் துரோவ், பிரான்சில் கைதாகி விடுவிக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராமில் பாலுறவு வீடியோக்கள் பகிரப்படுவது, தவறான சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை கைதுக்கான காரணம் என கூறப்படுகிறது. உண்மையில் ஒரு ஆப்பை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவர் தொடங்குகிறார். ஆனால், அதன் பயன்பாடு நாளடைவில் கட்டற்றதாக கட்டுப்படுத்த முடியாததாக மாறுகிறது. இந்த செயல்பாடு, அதைப் பயன்படுத்தும் மக்களின் கைகளில் உள்ளது. இதற்காக எதற்காக ஆப் தொடங்கினாய், உன்னால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என ஆப் உரிமையாளரை கைது செய்வது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது அல்லவா? அப்படி பார்த்தால் கோடிங் எழுதுகிறவர்கள் அனைவரும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுவும் சாத்தியம்தான். 1984ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்தவர் துரோவ். இன்றை...

பேச்சுரிமை என்றால் என்ன என்பதை முழுமையாக விளக்கி சிந்திக்க வைக்கும் நூல்!

படம்
              ப்ரீஸ்பீச் நிகல் வார்பர்டன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் நிறைய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. வேலைவாய்ப்பின்மை காரணமாக வலதுசாரி மதவாதம் தலைதூக்கி வருகிறது. தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் மூலம் பயமும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. ஏழை நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் வழியாக வெறுப்பு பேச்சு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மெல்ல பறிபோகத் தொடங்கி வருகின்றன. ஃப்ரீஸ்பீச் என்ற நூல், பேச்சுரிமை என்றால் என்ன, அதற்கான  கொள்கை, தத்துவங்கள், அதற்கு எழுந்த சவால்கள், மத மீறல்களைக் கலைப்படைப்புகள், மதத்தை பகடி செய்யும் திரைப்படம், நாடகங்கள் ஆகியவை பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. பேச்சுரிமை என்றால் என்ன, இதன் தொடக்கமாக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஆன் லிபர்டி என்ற நூல் முன்வைக்கப்படுகிறது. இதில் எழுத்தாளர் மில், பேச்சுரிமை ஏன் முக்கியம். அதை காப்பது எந்தளவு அவசியம் என்று விளக்கி கூறியிருக்கிறார். இவர் கூறிய கருத்துகளை வாசித்தபிறகு, நூல் பேச்சுரிமைக்குள் வருவதாக கூறும் வெறுப்பு பேச்சு, ஆபாச ப...

இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள ஜனநாயகம்!

படம்
  பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்ப்பு நமது மரபணுக்களில் ஜனநாயகம் உள்ளதா? இந்திய பிரதமர், அண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அங்கு சென்று உரையாற்றியதில் அவர் ஒரு விஷயத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மனித உரிமைகள் இந்தியாவில் எப்படி நசுக்கப்பட்டன என்பதைக் கூறவில்லை. அமெரிக்க அதிபர்   மனித உரிமை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம். வெள்ளை மாளிகையில் மோடியின் வருகையொட்டி பூக்களின் அலங்காரம் செய்யப்ப்பட்டிருந்தது. மேசையில் சைவ உணவு பரிமாறப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஊடக சந்திப்பில் அமெரிக்க நிருபர் மனித உரிமைகள் பற்றி கேள்வியைக் கேட்டார். உடனே   மோடி மறைமுகமாக ‘’ஜனநாயகம் எங்கள் மரபணுக்களில் உள்ளது. அதுதான் எங்கள் ஆன்மா. எங்கள் ரத்த நாளங்களில்   ஓடுகிறது’’ என்று உரையாற்றினார். பிரதமர் கூறியதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுக்களை வளர்க்கும் முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டனர். அல்லது திட்டமிட்டு மதவாத கும்பல்களால் கொல்லப்ப...