இடுகைகள்

மெட்டாலிகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

படம்
  மெட்டல் மியூசிக்  நிக்கோல் ஹார்னிங் 104 பக்கங்கள் ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள்.   இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான்.  ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார்.  சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. தலையை மேலும்