இடுகைகள்

கூடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுப் பழக்கத்தால் மாறும் வாழ்க்கை முறை!

படம்
  சமூக கலாசாரத்தைப் பாதிக்கும் உணவு!  ஆப்பிரிக்காவின்  சகாரா பகுதியில் வேவர் பறவைகளை (Weaver birds) வைத்து நடத்தை சூழலியல் ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். இந்தப் பறவையின் உணவு விதைகள், தானியங்கள்தான். வேவர் பறவையின் உணவுப்பழக்கம்,  பிற பறவைகளோடு இணைந்து வாழும் சமூக பழக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானியங்களை உண்ணும் வேவர் பறவைகளோடு பூச்சிகளை உண்ணும் பிற பறவைகளை ஒப்பிட்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இதுபற்றிய பற்றிய ஆய்வுக்கட்டுரை, தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது.  வேவர் பறவை, ப்ளோசிடே(Ploceidae,) எனும் இசைப்பறவை குடும்பத்தைச் சேர்ந்தது.  சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் வேவர் பறவை, திறந்தவெளியில் குழுவாக இணைந்து இரை தேடுகின்றன. ஒரே மரத்தில் குழுவாக கூடு கட்டி வாழ்கின்றன. இப்படி குழுவாக இருப்பதற்கு, வேவர் பறவையின் உணவுப்பழக்கம் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே வேவர் இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் காட்டில் வசிக்கின்றன. ஆனால் அவை இரை தேடுவதையும், மரங்களில் கூடு கட்டுவதையும் தனியாகவே செய்கின்றன. இவை பூச்சிகளை உண்ண

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில