இடுகைகள்

சூழல் பதற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

சூழலைக் காக்க குழந்தை வேண்டாம்! - புதிய தியாகிகள் உதயம்!

படம்
சுற்றுச்சூழலுக்காக சில தியாகங்களை பலரும் செய்வதுண்டு. ஒரு பொருளை வாங்கினால் மீண்டும் அதனைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலை பயன்படுத்துவது, ஆக்சிஜன் தரும் செடிகளை வளர்ப்பது உள்ளிட்டவை இந்த வகையில் சேரும். ஆனால் திருமணம் செய்தாலும் குழந்தை வேண்டாம். சூழலுக்கு பிரச்னை, வளரும் வாய்ப்பில்லை என தவிர்க்க முடியுமா? இப்படிப்பட்ட சிந்தனையும் ஒருபுறம் வளர்ந்துவருகிறது. அதை மற்றவர்கள் மறுக்கவும் முடியாது. தீவிரவாதம், பஞ்சம், குழந்தை கட்டுப்பாட்டு என நிலைமை மாறி வருகிறது. நிருபமா கொண்டய்யா, விபின் நாயர் அப்படிப்பட்ட தம்பதிகள்தான். எங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லி, அதற்கான காரணத்தை சொன்னால் உடனே விநோதமாக உறவினர்கள் பார்க்கிறார்கள். அதற்காக எங்களுக்கு உடல் பிரச்னை என்று கூறமுடியுமா? சரியான சூழல் இல்லை என்று தைரியமாக கூறி வருகிறோம் என்கிறார் நிருபமா. இது ஏதோ வின்சென்ட் காபோ போல புதுமைப்பித்து தலைக்கேறியவர்கள் உருவாக்கிய கருத்து என நினைத்து விடாதீர்கள். அமெரிக்காவில் அலெக்சாண்டிரியோ ஒக்காசியோ கார்டெஸ் என்ற அம்மணி, குழந்தை பெறாதீர்கள். சூழல் கெட்டுவிடும