தனிமையில் உள்ளவர்களை இணைக்கும் நட்பு கம்யூனிட்டிகள்!
சமகாலத்தில் நட்பு எப்படி இருக்கிறது? இன்று நட்பு என்பது தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து அப்படியே தொடர்வதில்லை. அலுவலக நட்பு என்பது பெரும்பாலும் ஆபத்திலும், நமக்கு நாமே குழிவெட்டிக்கொள்வதிலுமே முடியும். எனவே, பெரும்பாலான அலுவலக பணியாளர்கள், வேலையை செய்துவிட்டு வந்து தனியாகவே இருக்கிறார்கள். நட்பு வேறு, திருமண வாழ்க்கை உறவு வேறு. அவர்களுக்கு ஒரே நட்பாக ஸ்மார்ட்போன் உள்ளது. சிலர் புத்தகங்களை கிண்டிலில் படித்துக்கொண்டு பொழுதை ஓட்டுகிறார்கள். என்னுடைய விதியை நானே தீர்மானிப்பேன் என துணிச்சலாக உள்ளவர்கள், பம்பிள் போன்ற ஆப்பை தரவிறக்கி அதன் வழியாக புதிய நண்பர்களை, காதலை தேட முயல்கிறார்கள். டேட்டிங் ஆப் என கூறப்பட்டாலும் அதில் நீங்கள் நண்பர்களையும் தேடலாம். பெறலாம். ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளவரோடு நட்பு சாத்தியமாவதில்லை. குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ளவர்களோடு நட்பு பூண முயல்கிறார்கள். அறிமுகமில்லாத நண்பர்கள் எனும்போது உயிருக்கு ஆபத்து, பெண்களுக்கு வல்லுறவு அபாயம், கொள்ளையடிக்கப்படுதல், தாக்கப்படுதல் ஆகிய பிரச்னைகளை சிலர் எ...