இடுகைகள்

குமுதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களும

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.2022 மயிலாப்பூர் -------------

இளமையான குமுதம் வார இதழை வெற்றிபெறச் செய்த எடிட்டர் எஸ்ஏபி!

படம்
  எடிட்டர் எஸ்ஏபி ரா.கி.ரங்கராஜன் ஜ.ரா.சுந்தரேசன் புனிதன் குமுதம் இதழை தொடங்கி ஆசிரியராக நடத்தியவர், எஸ்.ஏ.பி. அண்ணாமலை. இவருக்கு உதவிய பதிப்பாளர் பார்த்தசாரதி. இருவரும் சேர்ந்துதான் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற கேப்ஷன் கொண்ட குமுதத்தை உருவாக்கினர்.  குமுதத்தின் அடிப்படையே புதுமைதான். இன்று குமுதம் இருபது ரூபாய் விலையில் விற்று வருகிறது. ப்ரியாகல்யாணராமன் அதனை பாகுபலியாக சுமந்து வருகிறார். அன்று நிலைமை அப்படியில்லை. எஸ்ஏபி இதற்கென மூவரை உதவி ஆசிரியர்களாக வைத்திருந்தார். அவர்கள்தான் எடிட்டர் எஸ்ஏபி நூலை எழுதியவர்கள்.  நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். அதை தொகுத்தே மூவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களாக தொகுத்துள்ளனர்.  எடிட்டர் எஸ்ஏபி, தான் வாழும் காலம் மட்டும் தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து எழுத அனுமதிக்கவிலை. செட்டியார் அந்த மட்டுக்கு தெளிவாக வீண் புகழ்ச்சி, திறமையைக் கெடுக்கும் என உணர்ந்திருக்கிறார். ரா கி ரங்கராஜன் எழுத்தில் ஒருமுறை மட்டுமே ஒருவரது புகழ்ச்சியால் மயங்கியிருந்த நிகழ்வை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.