இடுகைகள்

டிராகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம்!

படம்
  கேள்வியும் பதிலும்! டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம் உண்டா? வாயில் நெருப்பை உமிழும் உயிரினம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில். நெருப்புக்கு இணையாக வேதிப்பொருளைப்  பின்புறமாக உமிழும் உயிரினம் உண்டு. அதன் பெயர், பாம்பர்டியர் பீட்டில் (Bombardier beetle). இந்த வண்டு பிறரால் தாக்கப்படும்போது சூடான, எரிச்சல் உண்டாக்கும் திரவத்தை விசிறியடிக்கிறது. இதில் இரு வேதிப்பொருட்கள் உள்ளன.  ஹைட்ரோகுயினோன் (Hydroquinone), ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen peroxide) இந்த இரண்டுமே வண்டின் வயிற்றுப் பகுதியில் தனித்தனி இடங்களில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் அவசரநிலையில், ஒன்றாக கலக்கப்பட்டு வெளியேறுகிறது. இதனை ஏதேனும் உயிரினம் விழுங்கினால் கூட வேதிப்பொருட்களை ஸ்ப்ரே செய்வதால், இதனை கீழே துப்பிவிடுகின்றன.  நர்ட்லெஸ் (Nurdles) என்றால் என்ன? சிறிய பிளாஸ்டிக் துண்டு அல்லது துகள்கள் எனலாம். இதனை பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் பயன்படுத்துகிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் டன்கள் தயாரிக்கப்பட்டு நிலம், நீரில் கழிவாக தேங்குகிறது. கடலில் நர்ட்லெஸ் கழிவுகள் போடப்படுவதால், கடல் உயிரினங்கள்

பத்து வளையங்களின் சக்தி கொண்ட அப்பாவை எதிர்க்கும் மகன்! சாங் சி- மார்வெல்

படம்
  சாங் சி மார்வெல் அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்து வரும் வேலையை நாயகனும் நாயகியும் செய்து வருகிறார்கள். இதில் நாயகனுக்கு கடந்த காலம் ஒன்றுண்டு. அதனை அவன் தனது தோழி பிளஸ் காதலியிடமும் சொல்லவில்லை. பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது நடைபெறும் மோதல், அவனை யாரென்று காதலிக்கு புரிய வைக்கிறது. நாயகனின் கழுத்தில் உள்ள டாலரை மட்டும் அந்த கும்பல் பிடிங்கிக்கொண்டு செல்கிறது. அதனைத் திரும்ப பெறுவதோடு, தனது தங்கையையும் காப்பாற்ற சாங் சி சீனா செல்கிறான். அங்கு என்ன நடந்தது? தங்கையின் உயிருக்கு வந்த ஆபத்தை தவிர்க்க முடிந்ததா? கொள்ளையடித்த கும்பலின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.  ஆசிய கலாசாரம், குடும்ப உறவு என ஹாலிவுட் திரும்பிவிட்டது படத்தில் தெரிகிறது. படம் நெடுக குடும்ப உறவுகள், கலாசாரம், தனது வேர் என்ன என்பதை நோக்கியே படம் செல்லுகிறது.  சாங் சியின் அப்பா, சாங் சியின் காதலியிடம் அவளது குடும்பம் மற்றும் சீனப் பெயரைக் கேட்கும் காட்சி இதற்கு உதாரணம். பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் கதைக்கான முக்கியமான திருப்புமுனை.

டிராகன்களை மீட்டு தீயசக்தியை வேரறுக்க நெடும்பயணம்! - ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்

படம்
  ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன் டிஸ்னி அனிமேஷன்  ராயா  ஒரு குகைக்குள் தனது செல்ல வண்டுடன் சென்று கிரிஸ்டல் கல் ஒன்றை எடுக்க முயல்கிறாள். அதனை வாளேந்திய பாதுகாவலர்  வாளை உறையிலீருந்து உருவாமலேயே எளிதாக தடுக்கிறார். இதுதான் ராயாவின் கதை. ராயா எதிர்த்து சண்டை போட்டது அவளது அப்பாவிடம்தான்.  இவர்கள் இருவரும்தான் டிராகன் கிரிஸ்டலை பாதுகாக்கிறார்கள். இந்த கிரிஸ்டல் உடையாமல் பாதுகாக்கப்படும் வரை மட்டுமே ராயாவின் பேங் உள்பட ஐந்து நாடுகளும் நலமுடன் இருக்கும். இல்லையென்றால் தீய சக்திகள் வந்து அனைத்து மக்களையும் உயிருடன் சிலைகளாக்கிவிட்டு போய்விடும்.  இயற்கை எப்போதும்போலத்தான் இருக்கிறது. ஆனால் மனிதர்களின் மனம் அப்படியில்லையே, அப்படித்தான் ராயாவின் அப்பாவை அவர்களது நாட்டை சுற்றிலும் வாழும் பல்வேறு குறுநாட்டு அரசர்கள் எதிர்க்கிறார்கள். எல்லாம் டிராகன் கிரிஸ்டலை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளத்தான்.  அவர்க்ள அனைவரும் ஒன்றாக ராயாவின் நாட்டிற்கு விருந்து ஒன்றுக்கு வரும்போது ராயாவின் தோழிபோல நடித்து அவளை ஏமாற்றும் சிறுபெண் செய்த சதியால்  கிரிஸ்டல் உடைபட்டு அனைத்து குறுநாடுகளின் அரசர்களும் அதனைக் கைப்பற்

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல