இடுகைகள்

இட ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.  கங

சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

படம்
  மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது 2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.  2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அரசிடம் இல்

அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்! - பணிகளில் காட்டப்படும் தீண்டாமை!

படம்
TNIE அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்!  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. முகேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தர்காண்ட் அரசு, பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்குவது அடிப்படை உரிமை கிடையாது என்று கூறியுள்ளது. அரசியலமைபச இந்த வழக்கு மட்டுமல்ல; இந்தியாவில் பல்வேறு பட்டியலினத்தவர்களுக்கு அரசு இதுபோன்ற அநீதியை இழைக்கிறது. இது எப்படி என்றால், ஆதி திராவிடர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அரசு பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் பணி ஓய்வு வரை அவர்களுக்கான பதவி பயன்களை கொடுக்க மறுக்கிறார்கள் இதில் ஊதிய உயர்வு, போனஸ் தொகை போன்றவையும் உள்ளடங்கும். பணி ஓய்வு பெறும்போது, பதவி உயர்வு கடிதம், அதுவரை நிறுத்தியிருந்த ஊதிய தொகை ஆகியவற்றை அரசு வழங்கி மன உளைச்சலை உருவாக்கி வருகிறது. பஞ்சாபைச் சேர்ந்த பொதுநிர்வாகத்துறை ஊழியர் காஜல். இவருக்கு பணி ஓய்வு பெற்ற நாளில் பதவி உயர்வு கடிதம் கிடைத்துள்ளது. அதில் மூத்த பொறியியலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான பணிநாட்கள் முடிந்துவிட்டன. அவர் வேலை செய்தது சூப்பரிடெண்டாக, ஆனால் அ

எந்த ரத்தம் உசத்தி?

படம்
மும்பையில் டாக்டர் பாயல் தத்வி, மூத்த மாணவிகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி எப்போதும்போல அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. ஏனெனில் சாதிமுறையை ஆதரிக்கும் அரசு, அதனைப் பயன்படுத்தியே தேர்தலிலும் வென்று அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. அரசு எப்படி இதில் மாணவர்களுக்கு உதவப்போகிறது? கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார். தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும். புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே  உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்கள்.