இடுகைகள்

சைக்கோ கொலைகாரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியை கொன்று பீப்பாயில் ஊற வைத்த பாசக்கார கணவர் - பெலாகிஸ்

படம்
மென்டல் ஃபிளாஸ் அசுரகுலம் - இன்டர்நேஷனல் பெலா கிஸ் ஹங்கேரியின் சின்கோட்டா என்ற நகரில் டின்களை தயாரித்து விற்று வந்தார் பெலா கிஸ். வயது 37. திருமணமாகாத வாலிபர். ஆளும் பார்க்க உயரமாக திடகாத்திரமாக இருந்தார். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பெண்கள் அவரோடு நடனமாட போட்டியிட்டனர். இதனால் ஒரு பார்ட்டியில் அவரோடு நடனமாடிய பெண் மறுமுறை நடனமாட மாட்டார். அந்தளவு பெண்களின் ஈர்ப்பு இருந்த்து. அவர் தன் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டை வாங்கி வசித்து வந்தார். அவருக்கு வீடு தொடர்பான பணிகளை திருமதி ஜாகுபீ செய்துகொடுத்து வந்தார். நேர்மையான பணியாள் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும். கிஸ் என்ன சொன்னாரோ அதை அப்படி சாலையில் வெள்ளைக்கோடு மீது மாறாமல் வண்டி ஓட்டுவது போல கடைப்பிடித்தார். கிஸ் வெளியூருகளுக்கு செல்லும்போது வீட்டைப் பராமரிப்பதும் அவள்தான். 1914ஆம் ஆண்டில் உலகப்போர் காலகட்டம். ஹங்கேரி ராணுத்திற்கான அழைப்பு வர அதனை ஏற்றார். வீட்டைப் பார்த்துக்கொள்ள திருமதி. ஜாகுபீயிடம் கேட்டுக் கொண்டார். போர் முடிந்தபிறகும் கிஸ் வரவில்லை. உடனே ஊருக்குள் செர்பியாவிலே...

டிராகுலா கொலைகாரர் - பீட்டர் கர்டன் வாழ்க்கையின் இறுதிப்பகுதி

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் பீட்டர் கர்டன் சிறுமியை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்றது அடுத்த நாளே நகரில் முக்கியமான விவகாரமானது. மக்கள் அவரை நிழல் ராட்சசனாக பாவிக்கத் தொடங்கினர். அவர்கள் அப்படி பேசுவது, பயப்படுவது பீட்டருக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறரின் பேச்சின் மையப்பொருளாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது! அடுத்து இருமாதங்கள் கழித்து, பதினேழு வயதுப் பெண்ணை கொலை செய்து இன்பம் அனுபவித்தார். இம்முறை கொலையோடு, கொள்ளையையும் செய்ததில் பீட்டருக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. முன்னர் செய்த கொள்ளை ஒன்றுக்காக, பீட்டருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1921ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. வெளிவந்தவருக்கு அகஸ்டே ஸ்கார்ப் என்ற பெண்ணுடன் நட்பு கிடைத்தது. இவர் காரியக்கார விலைமாது. அப்போது தனியாக சிறு கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இருவரும் கைகோர்த்தாலும் தன் பாலியல் வேட்கைக்கு பீட்டரை, அகஸ்டே பயன்படுத்தி வந்தார். இறுதியில் ஒருநாள் தன் கணவரா, காதலனா என்று சிக்கல் வந்தபோது, கணவரைத் தேர்ந்தெடுத்தார். தொல்லையாக இருந்த பீட்டரை வலுக்கட்டாயப்படுத்தி வல்லுறவு செய்தார...

தினசரி மூன்றுமுறை செக்ஸ், ஐந்துமுறை சுய இன்பம்! - பாபியின் ரூல்ஸ் புதுசு

படம்
மனைவி சிந்தியாவுடன் பாபி ஜோ லாங் அசுரகுலம் பாபி ஜோ லாங் நீங்களே சொல்லுங்கள். உடலுறவு அனுபவிப்பதில் தவறு என்ன இருக்கிறது? அதுவும் பாபி தன் மனைவியிடம்தான் அனுபவித்தார். கல்யாணமான புதிதில் வேகமாக இருப்பவர்கள், பின்னாளில் மெல்ல தளர்வார்கள். எண்ணிக்கை சரசரவென குறையும். குழந்தை பிறந்தபிறகு உடலுறவு கொள்ளும் எண்ணிக்கை இன்னும் குறையும். பிறந்த குழந்தையை தந்தை தூக்கி உடல்மணத்தை நுகரும்போது டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு. ஆனால் பாபிக்கு நடந்த துரதிர்ஷ்ட விபத்து அனைத்தையும் மாற்றிவிட்டது. தினசரி மூன்று முறை மனைவியிடம் உடலுறவு கொள்வார். பின்னர் ஐந்து முறை சுய இன்பம் அனுபவிப்பார். காரணம் ராணுவப்பணிக்கு பிறகு அவருக்கு நேர்ந்த சாலை விபத்துதான். அதன்பிறகுதான் அமைதியாக இருந்த பாபி ஆக்ரோஷமாக மாறினார். கூடுதலாக உடலுறவு  வேகமும் கூடியதில் பள்ளித்தோழியாக இருந்து புரமோஷன் பெற்று காதல் மனைவியாக மாறிய சிந்தியாவுக்கு மூச்சு வாங்கியது. எத்தனை முறை? இப்படியே போனால் மாதத்திற்கு என கணக்கு போட்டால் சாதனை தம்பதி என இந்தியா டுடே செக்ஸ் சர்வேயில் கட்டுரை போடலாம் அல்லவா? ...

கருக்கலைப்புதான் சீரியல் கொலைக்கு காரணம் - சூ வென்

படம்
அசுரகுலம் சூ வென் இவரை சீனாவில் டாக்சி சாத்தான் என்கிறார்கள். துப்பினால் துடைச்சுக்குவேன் என பாட்டே பாடியாச்சு. இனி இவரை அசுரன் என்றால் என்ன ஆவக்காய் என்றால் என்ன? சீன மொழியில் கியா குவா என்று கூறிக்கொண்டு பிறரும் சென்றுவிடுவார்கள். 2003 ஆம் ஆண்டு ஜூலை தொடங்கி நவம்பர் வரை இவர் ஆறு பெண்களைக் கொன்றார். இரவில் மட்டும் விழிக்கும் சாத்தான் வென். இரவில் தன் காரில் ஏறும் பெண்களை இருள் சூழ்ந்த பக்கமாக கொண்டு சென்று, ம்ஹூம் நீங்கள் நினைக்கும் காட்சி கிடையாது. கயிறு வைத்து கழுத்தை இறுக்கி கொன்று உடலை கிணற்றில் அல்லது நகருக்கு வெளியே போட்டுவிட்டு அடுத்த சவாரி பார்ப்பது வென்னின் சாமர்த்தியம். இவருடன் காரில் மீட்டர் போட்டு வந்த பெண் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அதனை உடம்பின் பசிக்காக செய்திருந்தால் கூட வென் மன்னிக்க வாய்ப்பிருக்கிறது. ஒண்ணுமே செய்யாத தன் கணவரைப் பழிவாங்க செய்ய நினைத்தார். அந்த பாடாவதி லட்சியத்தையும் வென்னிடம் காதல் மயக்கத்தில் சொல்லித்தொலைய ருத்ரனான வென் அடுத்த நொடி அப்பெண்ணின் கழுத்தை முறித்துக் கொன்றார். வென், கார்ப்பரேட் கம்பெனி ஓனர் போல. அனைத்தையும் ...

காமம் தீர்ந்தால் கொலைவாசம்!

படம்
அசுரகுலம் லீ பிங்பிங் டாக்சி டிரைவர்தான் வேலை. இதில் என்ன கொலை செய்ய இருக்கிறது? பணம்தான். விபச்சாரிகள் டாக்சி ஓட்டுபவர்களை விட அதிகமாக சம்பாதிக்க முடிகிறது என லீ நம்பினார். எனவே ஏழு பேர்களை அசாத்திய மன உறுதியுடன் கொன்றார். 2002 -03 காலகட்டத்தில் இந்த கொலைகள் நடந்தன. விலைமாதுக்களை இரவு நேரத்தில் நைட் கிளப்பில் பிக் செய்தார் லீ. பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? நேரே காரியத்தைப் பார்த்தார். பசி தீர்ந்தபின் எச்சில்தட்டை பத்திரப்படுத்த வேண்டுமா என யோசித்தார். அவர்களிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு கொன்றார். உடல்களை குப்பைத்தொட்டியில் காகிதம் போல எறிந்துவிட்டார். இவையின்றி சாங் என்பவரின் குடும்பத்தையை கத்தியால் குத்தி அதகளம் செய்தார் லீ. என்ன காரணம்? லீயை பணிநீக்கம் செய்து கையில் நயாபைசா இன்றி திரியவைத்ததுதான். 1995 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. இதில் பலரும் அதிர்ச்சியானது, அத்தனை குற்றங்களுக்கும் மனைவி துணையாக இருந்ததுதான். இதனால் போலீஸ் இருவரையும் கைது செய்தபோது மனைவிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. கொலைகளைச் செய்த லீக்கு அதேதான். மரணதண்டனை விதித்து மார்ச் ...

அவளைப் போல் தெரிந்தாள்; கொன்றேன்!

படம்
அசுரகுலம் சாங் ஜிங்குவா சாங் ஜிங்குவா, ஒரே காரணத்திற்காகத்தான் கொலை செய்தார். அது சாயல்தான். தன் சகோதரரின் முன்னாள் காதலி போல தெரிந்த ஒரே காரணத்திற்காக ஒன்பது பெண்களை ஆக்டிவாக செயல்பட்டு போட்டுத் தள்ளினார். வெகுகாலமாகவே இவரும், இவருடைய சகோதரரும் சிறுசிறு திருட்டுகளை வயிற்றுக்காக செய்து வந்தனர். ஆனால் சீனாவில் காங்டி எனும் பகுதியில் செய்த கொலை அவர்களது வாழ்க்கையை மாற்றியது. அங்கு வண்டியில் வந்த ஒரு டிரைவரை கொள்ளையடித்து கொலை செய்தனர். இந்த குற்றத்திற்காக இவரது சகோதரர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு பதினேழு வயது என்பதால் எட்டு ஆண்டுகள் தண்டனையோடு தப்பினார். வெளியே வந்தவருக்கு நண்பர் யான் என்பவர் உதவினார். எதற்கு அண்ணனின் முன்னாளி காதலி எங்கே என்று கண்டறிய.ஆனால் அம்முயற்சி தோல்வியடைய, அச்சாயலில் இருந்தவர்கள் பலியானார்கள். பெண்களிடம் வேறெதும் இவர் தேடவில்லை. பணமும் உயிரை மட்டும்தான் கேட்டார். அவ்வளவுதான். பணம் கூட செலவழித்தால் காணாமல் போய்விடும். ஆனால் கொலை செய்த உடல்களை என்ன செய்வது? பெண்கள் காணாமல் போனதை போலீசும் கண்டுபிடித்திருந்தனர். அப்போ...

கொல்வதற்காகவே பிறந்தவன்!- ஹூவாங் யாங்

படம்
அசுரகுலம் ஹூவாங் யாங் (நேற்றைய தொடர்ச்சி) தஹூவாங்சுஹூவாங் எனும் கிராமத்தில் வீட்டில் தங்கியிருந்தார். யாங். கிராமம் பெரியதுதான். ஆனால் யாங் வாங்கும் சம்பளத்திற்கு சிறிய அறைதான் கிடைத்தது. அங்கு நிறைய கஃபே, தேநீர்கடைகள் இருந்தன. நியான் ஒளிகளால் நிறைந்த அந்த இடத்தில் தன் வேட்டையை யாங் தொடங்கினார். மெல்ல அங்கிருந்த இளைஞர்கள் காணாமல் போகத் தொடங்கினர். இது குறித்த புகார் வர போலீசாரும் கண்காணிக்கத் தொடங்கினர். கம்ப்யூட்டரோ அல்லது வேறு விஷயங்களை செய்துகொண்டிருக்கும் மாணவர்களை அணுகுவது யாங்கின் வழக்கம். மெல்ல அவர்களுக்கு வேலை தருவதாக பேசி மனதை மயக்குவார். நம்பிக்கை பெறுவார். பின் விழிப்புணர்வோடு இருந்தால் எப்படி வல்லுறவு செய்வது? என்று போதைப்பொருட்களை மதுபானத்தில் கலந்து கொடுப்பது யாங் பாணி. போதையில் கவிழ்ந்தவுடன் அவர்களை நண்பர் போல கைபிடித்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக பாவ்லா காட்டி தன் வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவார். வீட்டிற்கு தள்ளி உள்ள ஷெட்டிற்கு இளைஞர்களை கொண்டு சென்று, மரக்குதிரை போன்ற நூடுல்ஸ் செய்யும் கருவி அருகே கிடத்துவார். அந்த கருவி மூலம்தான் மாணவர்களை அழுத்தி எ...

உன்னைக் கொல்ல ஆசை! - அசுரகுலம்

படம்
அசுரகுலம்  வாங் ஃபாங் வாங் ஃபாங் செய்தது சீரியல் கொலைகளா என்பதிலேயே சீன காவல்துறை குழம்பி வருகிறது. ஏனெனில் தொண்ணூறுகளில் சீனாவில் தடைசெய்யப்பட்ட எலி விஷமான துஷூகுயாங் என்பதை வாங் பயன்படுத்தினார். இந்த சிம்பிள் டெக்னிக் மூலமே குடும்ப உறுப்பினர்களை கொன்று போட்டார். அதாவது எட்டு பேர்களை. ஆனால் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. காரணம், அவர்கள் குடியிருந்த வீடு ஒரு பேய் வீடு என்ற மூடநம்பிக்கைதான் காரணம். வாங், அவர்களது குடும்பத்தினரைக் கொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? பெண்களுக்கு மனதில் எப்போதும் நொடிக்கொரு தரம் பூக்கும் பொறாமைதான். அது கொஞ்சம் வாங்கிற்கு அதிகம் அதனால் நம்பிக்கையைக் காப்பாற்றாத காதலுக்குக் கூட விஷம் வைத்துக் கொன்றார். அதனாலேயே போலீசிலும் மாட்டிக்கொன்றார். ஆனாலும் என்ன நினைத்ததை சாதித்து விட்டார். அவ்வளவுதான். ஹூவான் யாங் இந்த சீரியல் கொலைகாரர், 25 க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொன்று ஊறுகாய் போட்டார். இவரிடமிருந்து தப்பி போலீசுக்கு புகார் சொல்ல ஓடிவந்தார் ஓர் இளைஞர். உடனே காரை எடுத்துக்கொண்டு யாங் வீட்டுக்குச் சென்றால் பெரும் அதிர்ச்சி. கொலை செய்யும் அ...

சிவப்புடை கொலைகாரன்!

அசுரகுலம் துவான் குவோசெங் துவான் குவோசெங், மத்திய சீனாவின் ஹூபெய் பகுதியில் 13 பெண்களைக் கொன்றார். துவானுக்கு ஒரே நோக்கம் காசுதான். கற்பழிப்புக்கு எல்லாம் நேரமில்லை. சில சமயங்களில் உசுப்பேற்றிய இளந்தாரிகளை முயற்சித்து பார்த்தார் என்றாலும் அது உடலின் அந்த நொடி தேவைதானே ஒழிய நோக்கம் கிடையாது. 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன் கொலைவரிசையை துவான் தொடங்கினார். தாக்குதல், கொள்ளை, கொலை என அ, ஆ, இ வரிசையில் மிகச்சரியாக பயணித்தார். கொன்றவர்கள் அனைவருமே இருபது வயதான பெண்கள்தான். முதலில் துவான் முயற்சி செய்தது, சாலையில் இரவு நேரத்தில் போனைப் பார்த்தபடி நடக்கும் லூசு பெண்களைத்தான். ஆனால் பிறகு அந்த முயற்சிகள் நினைத்த பலனைத் தரவில்லை என்பதை உணர்ந்தவர், வீடு புகுந்து ரிலாக்சாக கொள்ளையடிக்க தொடங்கினார். அவர் சந்தித்த முதல் பெண்ணை வெறிகொண்டு பாய்ந்து தாக்கியதில் அவரின் உடலில் 30 கத்திக்குத்துகள்.  அப்போது அந்த பெண் சிவப்பு டிரெஸ் அணிந்திருந்தார். அதற்காகவே துவானை, சிவப்புடை கொலைகாரன் என அழைத்தனர். கொலை, கொள்ளைகளுக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்கான காரணம், சிறுவ...

குப்பையில் உடல் பாகங்களை தேடிய போலீஸ் - பட்சர் அட்டூழியம்

அசுரகுலம் சென் யாங்ஃபெங் சென் யாங்ஃபெங் ஒரு சீரியல் கொலைகாரர். 1983 ஆம் ஆண்டு பிறந்தவர், செய்த கொலைகளுக்காக 2003 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். சென், சீனாவின் வென்சூ பகுதியில் பத்து பேர்களைக் கொன்றார். காரணம் , குப்பை பொறுக்குவதில் ஏற்பட்ட தகராறுகள்தான். தனக்கு தொழில் போட்டியாக இருந்தவர்களை ஜாலியாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அத்தனை பேர்களையும் வெண்டைக்காய் நறுக்குவது போல கொன்று நறுக்கி ஊரின் மூலை முடுக்கெங்கும் ஒவ்வொரு பார்ட்டாய் வீசி எறிவது சென்னின் வழக்கம். இவர் கைதானது ஆச்சரியமான நிகழ்வுதான். சென் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போலீஸ், ஜஸ்ட் உங்களது சைக்கிளை சற்று நகர்த்திக்கொள்ளுங்கள் என்று கேட்கத்தான் காலிங்பெல் அழுத்தினர். ஆனால் கதவு நீக்கியபோதுதான், சென் தன் போட்டியாளரை கொன்று உப்புக்கண்டம் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. சென் ஆன் தி டூட்டியாக ஒரு ஆளைக் கொன்று கொண்டிருந்தார் அல்லவா? அவர்தான் சைக்கிள் ஓனரும் கூட. சென் கைதானது தெரிந்தவுடன் வென் சூ ஏரியாவே மிரண்டு போனது. வெளியாட்கள் அங்கு வந்தாலே சந்தேகமாக பார்க்கத் தொடங்கினர். சென்னின் கைவண்ணத்தா...

நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!

படம்
அசுரகுலம் நோரியோ நகாயாமா எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. 1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்ற...

கொல், கற்பழி, தூக்கியெறி - யோசிரா கொடைரோ

படம்
அசுரகுலம் இவன் வேற மாதிரி - யோசிரா கொடைரோ யோசிரோ கொடைரோ மிகச்சிறந்த கற்பழிப்பு வல்லவர். 1945 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் தன் மாமனாரைக் கொன்றார். அதோடு பத்து பெண்களையும் கொன்று உப்புக்கண்டம் போட்டார். யோசிரோவுக்கு மிகச்சிறந்த கெட்டபழக்கம் ஒன்றுண்டு. கொன்ற பிணங்களோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம். அதனை ஆங்கிலத்தில் நெக்ரோபிலியா என்று அழைக்கின்றனர். தீராத அலைகழிக்கும் பாலுறவு ஆசை இப்படி யோசிராவை அலைகழித்து இன்று இதோ நான் எழுதும் கட்டுரையிலும் அவருக்கு அவமானத்தை தேடி தருகிறது. அவர் வெட்கப்பட ஏதுமில்லை. ஏனென்றால் உலகிலுள்ள சைக்கோ கொலைகாரர்களில் பெரும்பாலானவர்களுக்கு நெக்ரோபிலியா எனும் செக்ஸ் ஆசை உண்டு. இவர் செய்த ஐந்தாவது கொலையில் கர்ப்பிணியின் தொப்புள் வழியாக கத்தியைச் செருகினார். இதிலிருந்தே சார் எப்படிப்பட்ட  கொதிப்பான மனநிலையில் சம்பவங்களை செய்கிறார் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். யோசிராவின் சமூக சேவைகளைப் பாராட்டி ஜப்பான் அரசு 1948 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. பின் ஓராண்டுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. நன்றாக வ...

தற்கொலைக்கு தூண்டிய சைக்கோ மனிதர்!

படம்
அசுரகுலம் ஹிரோஷி மெயுவெ 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டு அன்று பிறந்தவர் ஹிரோஷி. இவரைப்பற்றி ஏன் எழுதுகிறோம் என்றால் பணத்திற்காக கொலை செய்வது தாண்டி மனநிலையின் அழுத்தம் தாங்காதவர்கள்தான் சமூகத்திற்கு பெரும் சோதனையாக அமைகிறார்கள். இவர்கள், அந்தந்த காலகட்டத்தை நம் மனதுக்கு உணர்த்துகிற சாட்சிகள் கூடத்தான். ஹிரோஷி மூன்று பேர்களைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றுபேரையும் நேரடியாக கொல்லவில்லை என்பதுதான் இவரைப் பற்றி நாம் எழுதக்காரணம். இவரது ஆளுமை மாற்றத்திற்கு மர்ம நாவல்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் கொலை, கொள்ளை நாவல்களை படித்தவர். அதனை பரீட்சித்து பார்க்க முயற்சித்துதான் பெரும் தீவினையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. கான்சாவா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் மாணவராக சேர்ந்து படித்தார். அங்கு ஒரு மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சித்து தோற்றுப்போனார்.  பின், 1988 ஆம் ஆண்டு படிப்பை விட்டு நின்றார். பின் ஏனோதானோவென்று வேலைக்கு சென்று வந்தார். மீண்டும் மனதில் அசுரன் தலைதூக்க, யோசிக்கவேயில்லை. கூட வேலை செய்தவரை தூக்கிப் போட்டு மிதித்தார். போலீசாரு...

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுவது ஏன்?

படம்
அசுரகுலம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் ஒரு பெண் குற்றவாளி ஒருவரால் கடத்தப்படுகிறாள். அவரோடு பல நாட்கள் கைதியாக, பணயப் பொருளாக இருக்கும்போது, கடத்தல்காரரை நம்பி தன்னுடைய பாதுகாவலராக நினைத்துகொள்வதை உளவியலாளர்கள் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகின்றனர். பெயர் வந்த கதை 1973 ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகர். அங்குள்ள பெத்த பேங்கில் திடீர் கொள்ளை. கூடவே பணயக்கைதியாக ஆறுபேர்களை பிடித்து வைத்துக்கொண்டார் கொள்ளைக்காரர். அந்த ஆறுபேரும் மெல்ல கடத்தல்கார ருக்கு ஆதரவாக மாறி நடந்துகொண்டதை பின்னர் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நிலைக்கு விவகாரம் நடந்த நகரின் பெயரையே சூட்டினர். அந்த கைதிகள் கொள்ளையர்களால் சுடப்பட்டு காயமடைந்தாலும் அவர்களை நேசிக்கத் தொடங்கிய காரணத்தை அந்த பரம பிதா வந்தால்தான் ஏன் என்று கூற முடியும் என போலீஸ் தலையை பிய்த்துக்கொண்டது.  கொள்ளையர்களை போலீஸ் விரைவில் கைது செய்தது. பேங்கில் பணயக்கைதிகளாக இருந்த ஆட்களே சட்டரீதியில் அவர்களை விடுதலை செய்ய முயற்சித்தனர். சிறையில் சென்று கொள்ளையர்களை சந்தித்து போலீசாரை ஆச்சரியப்பட வைத்தனர். ஸ்டாக்ஹோம் சி...

அதிர வைத்த கொலைகாரர்கள்!

படம்
வெளிநாட்டு சைக்கோ கொலைகாரர்களை மட்டும் பார்த்திருப்போம். ஆசியாவிலும் அதுபோன்ற பலரும் அறியாத ஆட்கள் உண்டு. நாம் அவர்களில் சிலரைப் பார்ப்போம். அஹ்மத் சுராட்ஜி சிறுவயதிலிருந்து திருட்டு, தெருச்சண்டை என வரிந்துகட்டுபவர் எங்கு புழங்கி வருவார். அதேதான். சிறையில்தான். பின் ஊரில் என்ன மரியாதை இருக்கும். ஆனால் அஹ்மத் தன்னை நோய்களைத் தீர்ப்பவராக நினைத்துக்கொண்டார். சாதாரணமாக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் என்னாகும்? உலகம் நம்பும்தானே. அதேதான் இங்கும் நடந்தது. ஆனால் அதற்கான விலை எத்தனை உயிர்கள் தெரியுமா? 42 பெண்களை கொன்று புதைத்தார். அவர்களிடம் எதையும் திருடவில்லையா? திருடினார். ஆம் அவர்களின் எச்சிலை மட்டுமே சேமித்து வைத்தார். அது தனக்கு மாந்திரீகத்தில் பெரும் சக்தியை அளிக்கும் என உளமாற நம்பினார். கரும்புக் காட்டில் பெண்களை புதைத்த இடங்களை மகிழ்ச்சியாக பரவசத்துடன் போலீசுக்கு சுட்டிக்காட்டினார் அஹ்மத். சும்மா விடுவார்களா? நன்கு உதைத்து சிறையில் தள்ளியவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ரோஷூ கா ரோஷூ கா, காதலித்தார். எத்தனைப் பேரை தெரியுமா? நூற்றுக்கணக்கான பெண்களை. ...

அசுரகுலம் - சோப்ராஜின் முடிவு என்ன?

படம்
சோப்ராஜ் எனும் பாம்பு! சார்லஸ் சோப்ராஜூக்கு பாம்பு என்ற பெயரும் உண்டு. என்ன காரணம், குற்றம் செய்த இடம் ஆகட்டும் பிற இடங்கள் ஆகட்டும் அப்படியே நீரில் நழுவுவது போல செல்வதுதான் சாரின் சிறப்பம்சம். 1976 ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, சோப்ராஜ் பத்து கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு இந்தியாவில் அவர் சிறை தண்டனை முடிவுக்கு வந்தது. தாய்லாந்தில் சோப்ராஜூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அங்கே செல்ல சோப்ராஜூக்கு பைத்தியமா என்ன? சிறையில் அமைதியாக வாழ்நாளை கழித்தவருக்கு பெருமை சேர்க்க அவரது கூட்டாளிகள் முடிவு செய்தனர். பின்னே சோற்றுக்கு இல்லாமல் சிறைக்க வந்தவரா சோப்ராஜ்? அதனால், ஜாலியாக பார்ட்டி கொண்டாட முடிவு செய்தனர். பத்தாண்டு சிறை வாழ்க்கை, வாழும் வள்ளுவர், மக்களின் மனசாட்சி என கோரஸ் பாடி சரக்குடன் கொண்டாடினர். சிறையில் அதெப்படி கிடைக்கும் என பச்சைப் புள்ளையாக கேட்டால் உலகத்தை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மனிதர்கள் வாழும் நகரில் உன்னதங்களோடு ஊசல்தனங்களும் நடப்பதில்லையா? மனிதர்கள் எங்கு வசித்தாலும் அங்கு அவர்களின் கு...

உலகை மிரட்டிய சார்லஸ் சோப்ராஜ்!

படம்
சார்லஸ் சோப்ராஜ் ! பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சோப்ராஜ் இருபது சுற்றுலா பயணிகளைக் கொன்றார். இதற்காக சிறையில் அடைத்தாலும் அங்கிருந்தும் தப்பித்து போலீசாருக்கே தண்ணி காட்டிய ஆள். 1944 ஆம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார் சோப்ராஜ். தந்தையற்ற சூழலில் தெருவில்தான் வறுமையான வாழ்க்கை. அவரது தாயும் இவரும்தான்  அச்சூழலில் தவித்தனர். பின்னர் தாய் பிரெஞ்சு அதிகாரியை திருமணம் செய்ய சூழல் மாறியது. 1960 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்குச்சென்றவர், தன் குற்ற அதிகாரத்தை கட்டவிழ்த்தார். சிம்பிளாக ஆட்டோவைத் திருடினார். அதற்கு வசமாக சிக்க, சிறையில் தள்ளிவிட்டனர். பின்னர் சிறை தண்டனை அனுபவித்தவர் வெளியே வந்தார். பார்சி பெண் காதலைத் தூண்ட, யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குற்றத்திற்கு துணை வேண்டாமா? உடனே கல்யாணம். சந்தால் சம்பாக்னன் என்ற பெண்ணுடன் ஐரோப்பா முழுக்க நாடோடியாக அலைந்தனர். காசுக்கு கடத்தல், கொள்ளை என என்ன முடியுமோ அதனைச் செய்தனர். சகல சௌக்கியங்களுடன் வாழ்ந்தனர். 1973 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பியவர், காதல் மனைவியுடன் காபூலுக்கு வந்தார். இங்கும் சுற்றுலா பயணிகளிடம் ஆட்டையைப் போட்டு வாழ்ந்...

சைக்கோ கொலைகாரர்களின் குணங்கள்!

படம்
அசுரகுலம் - அதிர்ச்சியடைய வைக்கும் குணங்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் முக்கியமான பிரச்னை,அவர்களை ஆழமாக கவனித்தால் தெரியும். சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களின் நிறம் தெரியும். அதாவது குணத்தில் நிறம். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளைக் கொண்டவர்கள் தான் செய்த விஷயங்கள் குறித்து எந்த உணர்ச்சியும் இருக்காது. குற்ற உணர்ச்சி கூட. எதற்கும்  பொறுப்பேற்க மாட்டார்கள். தான் செய்த தவறுக்கும் பிறரையே பொறுபேற்க கட்டாயப்படுத்துவார்க்கள். தன்னைப் பற்றிய கம்பீரமான கருத்தைக் கொண்டிருப்பார்கள். வன்முறையைக் கையிலெடுப்பதில் பிறரை விட மூன்றுமடங்கு தீவிரத்தன்மை கொண்டவர்கள் சைக்கோ கொலைகாரர்கள். பாலியல் வல்லுறவு, பொய் சொல்லுவது ஆகியவற்றிலும் இந்த தீவிரம் பிறரை விட இரண்டு மடங்கு அதிகம் இருக்கும் என்கிறார் விஸ்கான்சின் ஆராய்ச்சியாளர் ஜோசப் நியூமன். பொதுவாக உளவியல் பாதிப்பு கொண்டவர்களின் மூளை செயல்பாடு பிறரை விட மாறுபட்டவை. பதினெட்டு சதவீதம் மூளையின் செயல்பாடுகள் மாறுபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக்கம்: பொன்னையன் சேகர் நன்றி: சயின்ஸ் ஆஃப் பீப்பிள்

சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை என்ன?

படம்
சைக்கோ கொலைகாரர்களின் மனநிலை 2012 ஆம் ஆண்டு டாக்டர் பால் பாபியாக் குழுவினர் சைக்கோ கொலைகார ர்களின் உளவியல் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். அதில்  எஃப்பிஐயின் 2012 ஆம் ஆண்டு அறிக்கையை முக்கிய ஆதாரமாக சுட்டிக்காட்டினர். அதில் அமெரிக்காவிலுள்ள 20 லட்சம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் உளவியல் பிரச்னைகளுக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் சைக்கோ கொலைகார ர்கள் செய்யும் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அதனை தற்செயலானது என்றே விசாரணையில் கூறுவார்கள். ஆனால் சமூகத்திடமிருந்து விலகி நடக்கும் குணம் கொண்ட இவர்களை எளிதாக கண்டறிய முடியாது. பொதுவாக இவர்களுக்கு கொலையில் உதவுபவர்கள், மனநிலை பாதிப்பற்றவர்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒருவகையில் கொலைகார ருக்கு நட்பு ரீதியில் உதவினாலும் பின்னாளில் இவர்கள் மீது பழிதூக்கி போடப்படுவதும் உண்டு. கொலையானவர்களை கொலைக்கு காரணமாக சொல்வது மனச்சிதைவுக்கு உட்பட்டவர்களின் குரூர யுக்தி. பொதுவாகவே பல்வேறு வழக்குகளில் இந்த தன்மையைக் காணலாம். நீதிமன்றத்தில் குற்றங்களை அரசு தரப்பு அடுக்கும்போது...

கொலையும் உளவியலும்! - பென் பிளாக்கெலி வன்முறை மனம்

படம்
அசுர குலம் - கட்டவிழும் வன்முறை உலகிலேயே நாம் கண்டறிய முடியாத ஒன்று என்ன தெரியுமா? உலகின் வரைபடம் என்ற சிறுவயது காமெடி வேண்டாம். பல பதில்கள் இதற்கு வந்தாலும் உண்மையானது மனிதர்களின் மனம்தான். மனதிலுள்ள பல்வேறு குரூர உணர்ச்சிகளை வெற்றிடம் வெளிப்படுத்த வாய்ப்பு தருகிறது. சாதாரண மனிதர்கள் உறங்கும் எரிமலை போல்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த எரிமலைகள் வெடிக்க லாவா பொங்கும். அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. உண்மையில் அப்படியொரு  நிகழ்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜேய்டன் பார்க்கின்சன் வாழ்க்கை பலரின் பார்வைக்கு வந்தது அப்படித்தான். 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் இறந்தபோது பார்க்கின்சனின் வயது 17 தான். தன் முன்னாள் காதலரான டிட்காட்டிலுள்ள பென் பிளாக்கெலியைப் பார்க்கப் போனது மட்டுமே உலகிற்கு தெரியும். பின்னர் என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. சரி, வேறு எங்காவது போனால் போனாவது செய்வாரே என்றால் அதற்கும் எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை. அப்போது தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, முன்னாள் காதலர், கணவரால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை...