சைக்கோ கொலைகாரர்களின் குணங்கள்!
அசுரகுலம் - அதிர்ச்சியடைய வைக்கும் குணங்கள்
உளவியல்ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் முக்கியமான பிரச்னை,அவர்களை ஆழமாக கவனித்தால் தெரியும். சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களின் நிறம் தெரியும். அதாவது குணத்தில் நிறம்.
கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளைக் கொண்டவர்கள்
தான் செய்த விஷயங்கள் குறித்து எந்த உணர்ச்சியும் இருக்காது. குற்ற உணர்ச்சி கூட.
எதற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். தான் செய்த தவறுக்கும் பிறரையே பொறுபேற்க கட்டாயப்படுத்துவார்க்கள்.
தன்னைப் பற்றிய கம்பீரமான கருத்தைக் கொண்டிருப்பார்கள்.
வன்முறையைக் கையிலெடுப்பதில் பிறரை விட மூன்றுமடங்கு தீவிரத்தன்மை கொண்டவர்கள் சைக்கோ கொலைகாரர்கள். பாலியல் வல்லுறவு, பொய் சொல்லுவது ஆகியவற்றிலும் இந்த தீவிரம் பிறரை விட இரண்டு மடங்கு அதிகம் இருக்கும் என்கிறார் விஸ்கான்சின் ஆராய்ச்சியாளர் ஜோசப் நியூமன்.
பொதுவாக உளவியல் பாதிப்பு கொண்டவர்களின் மூளை செயல்பாடு பிறரை விட மாறுபட்டவை. பதினெட்டு சதவீதம் மூளையின் செயல்பாடுகள் மாறுபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: சயின்ஸ் ஆஃப் பீப்பிள்