ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுவது ஏன்?
அசுரகுலம்
ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்
ஒரு பெண் குற்றவாளி ஒருவரால் கடத்தப்படுகிறாள். அவரோடு பல நாட்கள் கைதியாக, பணயப் பொருளாக இருக்கும்போது, கடத்தல்காரரை நம்பி தன்னுடைய பாதுகாவலராக நினைத்துகொள்வதை உளவியலாளர்கள் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகின்றனர்.
பெயர் வந்த கதை
1973 ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகர். அங்குள்ள பெத்த பேங்கில் திடீர் கொள்ளை. கூடவே பணயக்கைதியாக ஆறுபேர்களை பிடித்து வைத்துக்கொண்டார் கொள்ளைக்காரர். அந்த ஆறுபேரும் மெல்ல கடத்தல்கார ருக்கு ஆதரவாக மாறி நடந்துகொண்டதை பின்னர் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நிலைக்கு விவகாரம் நடந்த நகரின் பெயரையே சூட்டினர்.
அந்த கைதிகள் கொள்ளையர்களால் சுடப்பட்டு காயமடைந்தாலும் அவர்களை நேசிக்கத் தொடங்கிய காரணத்தை அந்த பரம பிதா வந்தால்தான் ஏன் என்று கூற முடியும் என போலீஸ் தலையை பிய்த்துக்கொண்டது. கொள்ளையர்களை போலீஸ் விரைவில் கைது செய்தது. பேங்கில் பணயக்கைதிகளாக இருந்த ஆட்களே சட்டரீதியில் அவர்களை விடுதலை செய்ய முயற்சித்தனர். சிறையில் சென்று கொள்ளையர்களை சந்தித்து போலீசாரை ஆச்சரியப்பட வைத்தனர்.
ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பாதிப்பு சூழல்கள்
தான் கடத்தல்கார ரால் கொல்லப்படும் நிலையில் இருக்கிறோம் என்பதை அறியும்போது.
கடத்தல்கார ர்களின் கருணையை நினைத்து மருகும்போது...
கடத்தல்கார ருடன் மட்டும் தனிமையில் இருக்கும்போது....
தீவிரமான வன்முறை, வசைகள் ஆகியவற்றால் தாக்கப்படுபவர்களுக்கு....
குறிப்பிட்ட நபர்களால் மூளைச்சலவை செய்யப்படுபவர்களுக்கு ஏற்படும் குழப்பம், தூக்கமின்மை, எரிச்சல், நம்பிக்கையின்மை, கனவுபயம் உள்ளிட்ட பிரச்னைகளை இவர்களும் சந்திப்பார்கள்.
இதற்கு தலைகீழானது லிமா சிண்ட்ரோம் என்ற பாதிப்பு. இது கடத்தல்காரருக்கு பிணைக்கைதி மீது வரும் நேசம், பாசம், காதல் வரை நினைத்துக்கொள்ளுங்கள். குணா கமல் நினைவுக்கு வருகிறாரா ரைட்.
ஆக்கம் பொன்னையன் சேகர்
நன்றி: தாட் .கோ