காதல் - கற்பழிப்பு - வல்லுறவு - காதல் மன்னனின் இருள் கதை!
அசுரகுலம்
ஃப்யூசோஸி மட்சுனகா
ஜப்பானின் யாங்காவா நகரில் பிறந்த மட்சுனகா, தன் சுயநலத்திற்காக நம்மைப் போலத்தான் எதுவேண்டுமானாலும் செய்வார். 1961 ஆம் ஆண்டு பிறந்தவர், பள்ளியில் பல பஞ்சாயத்துகளைக் கொண்டு வந்தார். எல்லாம் காதல் லீலைகள்தான். தன் ஜூனியர் பெண்ணை காதலித்தேன் காதலி தேன் என கேப் கூட விடாமல் சைட் அடித்தார். அதற்காக முழுநேரமும் ரொமான்ஸ் கியரைப் போட்டு கிர் அடிக்கவில்லை.
படிப்பிலும் பெயர் சொல்லும் ஆள்தான். ஆனால் என்ன மட்சுனகா செய்த ரொமான்ஸை யாரும் ரசிக்கவில்லை. என்னவாக இருக்கும் என நீங்கள் ரொம்ப யோசிக்காதீர்கள். பள்ளியில் மட்சுனகா செய்த காதல் பிரச்னைகளால் பல பள்ளிகளில் டிசியுடன் அலைந்தார்.
காதல் வேலி
மட்சுனகா, பார்க்க அழகானவர் என்பதை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. தன்னை வழிபடும் அடிமை கிடைத்தாலே பெண்கள் கிறங்கிவிடுவார்கள். இதில் கொஞ்சம் சாமுத்ரிகா லட்சணமும் சேர்ந்துவிட்டால் என்னாகும்?
ஒரே நேரத்தில் பத்து பெண்களுடன் பழகி சல்லாபித்த தீராத விளையாட்டுப்பிள்ளை விஷாலின் கிராண்ட் ஃபாதர் மட்சுனகா. அதேநேரம் பத்தொன்பது வயதில் திருமணம் செய்துகொண்ட வேகத்தை அவருடைய நண்பர்களே எதிர்பார்க்கவில்லை.
1982 ஆம் ஆண்டு மட்சுனகா, ஜூன்கோ ஒகடா என்ற பெண்ணைச் சந்தித்தார். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பெண்தான், மட்சுனகாவை ஏராளமான க்ரைம்களில் சிக்க வைக்கப் போகிறார். மனைவியை விட்டு விலகிய எரிச்சலில் மட்சுனகா ஜூன்கோவின் தாயைக் கூட வல்லுறவு செய்தார். 1985 ஆம் ஆண்டு முதலாக இவர் தன் மனைவியை விட்டு விலகினார். தனியாக ஜூன்கோவுடன் வாழத் தொடங்கினார்.
சைக்கோ கொலைகாரராக மாறத்தொடங்கிய காலம் இதற்குப் பின்னரே தொடங்குகிறது. இவர் வேர்ல்டு எனும் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் மூன்றாவது தளத்தில் சத்தம் உள்ளே நுழையாத அறையை உருவாக்கினார். இங்கு வைத்துத்தான் தன் ஊழியர்களை கொடுமைப்படுத்தினார். இந்த கம்பெனி மூலம் மட்சுனகா தில்லுமுல்லு செய்து சம்பாதித்தது மட்டும் 180 மில்லியன் யென்.
1992 ஆம் ஆண்டு மட்சுனகா, ஜூன்கா தம்பதிகளாக அரசின் தேவை பட்டியலில் இடம்பிடித்தனர். காரணம் என்ன? சமூகசேவையா? முழுக்க குற்றங்கள்தான். இதெல்லாம் மட்சுனாகாவுக்கு பெரிய விஷயமாகவே தெரியவில்லை.
1993 ஆம் ஆண்டு மட்சுனகா ஒரு பெண்ணை வல்லுறவு செய்ய முயற்சித்தார். அவள் அதனை அவரின் கூட்டாளி ஜூன்கோவிடம் சொல்ல, ஜூன்கோ அவளை சமாளித்து அனுப்பினாள். பின் மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்ப பெண்ணை சிதைத்தார் மட்சுனகா. பின் ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டி அவளின் சொத்தான 11.8 மில்லியன் யென்னை கையாடல் செய்தார்.
கொலைச் சித்திரவதை
மட்சுனகா குமியோ டொராயோ என்ற ஆணை டார்க்கெட் செய்தார். மகளுடன் வாழ்ந்து வந்த குமியோவுக்கு குற்றப்பின்னணி உண்டு. நண்பர் என நம்பி சொன்ன உண்மையை வைத்தே குமியோவை மிரட்டினார் மட்சுனகோ.
இருவரையும் தன்னுடைய சவுண்ட்ப்ரூப் அறையில் அடைத்து வைத்து சிறைச்சாலை படத்தில் வரும் காட்சியை நிறைவேற்றினார். போலீஸ் அதிகாரித ஐயரை மலம் தின்னவைப்பார் இல்லையா? அதேதான். இந்த அவமானத்தை மகள் முன் சந்திக்கும் ஒருவன் எப்படி உயிரோடு இருப்பான்? பின் மீதி சித்திரவதையை மகள் ஏற்றாள்.
இருள் மிருகன்
பின் மட்சுனகா பற்றிய உண்மையை இந்த பெண் வெளியே வந்தபிறகு, 2002 ஆம் ஆண்டுதான் உலகறிந்தது. கொலை, தில்லுமுல்லு, நரமாமிசம் உண்ணுவது என ஜப்பான் இருள் உலகை அறிந்தது அப்போதுதான்.
ஜூன்கோவின் குடும்பத்தை அணு அணுவாக சிதைத்த கதை பின்னர்தான் உலகிற்கு தெரிய வந்தது. ஜூன்கோவின் சகோதரி ரெய்கோ, அவரது கணவர் ஆகியோரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியது. ஜூன்கோவின் அப்பாவை ஷாக் வைத்து கொன்றது ஆகியவற்றை அரங்கேற்றிய அசுரன் மட்சுனகா.
ஆறு கொலைகளுக்கு ஆதாரங்கள் கிடைத்தன. மட்சுனகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
1996-98 வரையிலான காலம் குற்றங்களை உச்சமாக செய்தார் மட்சுனகா.
கொலை பாணி
மின்சார ஷாக் வைப்பது, கழுத்தை நெரித்து கொல்வது, அறையில் அடைத்து வைத்து பட்டினி போட்டு கொல்வது. 3 ஆண்கள், இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் கொலை லிஸ்டில் இடம்பெற்றனர்.
பத்தொன்பது வயதில் மணம் செய்து குழந்தையைப் பெற்றாலும் காமத்தீ மட்சுனகாவை எரிமலையாய் சுட்டது. உடனே ஜூன்கோவையும் மணந்தார். ஆனால் அவளது அம்மா மீதும் காம ஆசை ஓணானாய் ஏற என்ன செய்வது? ஜூன்கோவின் குடும்பமே இவரைக் கண்டு நடுங்கியது. ஜூன்கோவை அப்படி அடித்து குடும்பத்தை வழிக்கு கொண்டு வந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றார். உடனே பாசமாய் தடுத்துவிட்டார் மட்சுனகா.
பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடம் தேட்டையைப் போடுவதுதான் மட்சுனகாவின் பாணி. பணம், சொத்து தேறினால் அவர்களை கடத்தி கரண்ட் ஷாக் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் வாங்கிக்கொள்வதும் , அவர்களை விட்டுவிடுவதும் வழக்கம்.
இறுதியில் தான் செய்த கொலைகளை தன் மனைவி ஜூன்கோவின் தலையில் கட்டி எஸ்கேப்பாக நினைத்தாலும் ஆயுள் தண்டனையிலிருந்து தப்ப முடியவில்லை.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி:மர்டர்பீடியா, அப்சொல்யூட் க்ரைம், ஜப்பான் டைம்ஸ்