இடுகைகள்

கிருமிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

படம்
        ஜோசப் லிஸ்டர்       மருத்துவத்துறையில் இன்று டெட்டால் , சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன . இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா ? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார் . 1827 ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு . இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார் . இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும் ? மருத்துவராகவே ஆசைப்பட்டார் . லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார் . 1848 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது . அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர் . 1846 ்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார் . ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள் . இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரண

அழுக்கு நல்லதா? கெட்டதா?

படம்
மிஸ்டர் ரோனி படுசுத்தமாக சிலர் இருக்கிறார்கள். சிலர் சோப்புகளை பயன்படுத்தினால் அலர்ஜி என்கிறார்கள். எதுதான் சரி? பொதுவாக சுத்தம் என்பது டெட்டால் பாட்டிலை 25 ரூபாய்க்கு வாங்கி வந்து நீரில் கலந்து குளித்தால் வருவதல்ல. இயற்பாக உடலில் தோன்று இறந்த செல்களை அகற்ற குளித்தால் போதும். ஏன் சோப்பு போட்டு குளிக்கிறோம் என்றால் செல்களுடன் எண்ணெய் பிசுக்கையும் அகற்றவே. நமது தோலில் எவ்வளவுதான் அகற்றினாலும் போகவே போகாத ஆயிரம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் உண்டு. கடுமையான உடல் உழைப்பில் அல்லது வெயிலால் வெளிவரும் வியர்வைக்கு பொதுவாக மணம் கிடையாது. ஆனால் உடலிலுள்ள பாக்டீரியாக்கள் அதில் செய்யும் சில வேதிவினை வேலைகளால் அதில் வாசனை உருவாகிறது. இதனை நாற்றம் வீச்சம் நெடி என வைத்துக்கொள்ளுங்கள். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் ஹாலிவுட் பல சைக்கோ வில்லன்களல்ல. அவை, ஸ்டாபைலோகாக்கல், ஸ்ட்ரெப்டோகாக்கல் ஆகிய பாதிப்புகளையும் தடுக்கிறது. குளிப்பது தவறில்லை. தரமான டிஎஃப்எம் அதிகமுள்ள சோப்புகளை வாங்கி குளியுங்கள். அவ்வளவுதான். -பிபிசி

பொருளாதாரத்தை சிதைக்கும் காசநோய்!

படம்
இந்தியாவை வதைக்கும் காசநோய்! விறகு புகை, தொழிற்சாலை மாசுபாடு, பசு சாணம் ஆகியவை காரணமாக ஏற்படும் காசநோயின் அளவு தொண்ணூறுகளில் 28 சதவீதமாக இருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஸ்பெண்ட் செய்த ஆய்வுப்படி பத்து லட்சம் பேர் ஆண்டுதோறும் இறந்து வருகின்றனர். அரசு இந்நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா இந்நோயைக் கட்டுப்படுத்த 32 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. அதாவது அரசு அப்படிக் கூறுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டில் தேசிய சுகாதாரத் திட்டம், கல்வித்திட்டம், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இத்தொகை அதிகம். 2010 ஆம் ஆண்டு தொற்றா நோய்களுக்கான நாடு தழுவிய திட்டம்  தொடங்கப்பட்டது. இதில் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டன.  2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இணைந்தனர். நாங்கள் மாநிலங்களுக்கு கருவிகள் வாங்க 150,000, மருந்துகள் வாங்க 250000 ரூபாய் வழங்குகிறோம். மைசூருவைச் சேர்ந்த லக்ஷம்மா, பால் கறந்து வீடுகளுக