இடுகைகள்

வெள்ளை அணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதி

நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

படம்
                  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி ? வைரஸ் பாக்டீரியா , பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான் . தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான் . இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும் . உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது . இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா் . ம் . உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன . இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல . இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன . குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன . ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது . நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்படுகிறது . தோல் பற்றி முன்னமே எழுதியது ப