இடுகைகள்

நண்பர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  4.3.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்

அந்தரங்க ரகசியங்கள் உடைபட நண்பர்கள் கூட்டத்தில் நடைபெறும் கொலை! 12 Th Man - ஜீத்து ஜோசப்

படம்
  12th Man மோகன்லால் (நடிகர், தயாரிப்பு) இயக்கம் - ஜீத்து ஜோசப்  கல்லூரி நண்பர்கள் பதினொரு பேர், ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்யப்போகும் நண்பன் கொடுக்கும் பார்ட்டி அது. அங்கு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். அது வினையாக அதன் விளைவாக ஏற்படும் குழப்பமும், கொலையும் அதுதொடர்பான விசாரணையும்தான் படம்.  பதினொரு நபர்களை படத்தின் டைட்டில் கார்ட் போடும்போதே அறிமுகப்படுத்திவிடுகிறார்கள். இதனால் கதையில் இவர்களைப் பற்றி தனியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. கல்லூரி கால நண்பர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் இன்னொருவர் மீது புகைச்சலும் பொறாமையும் இருக்கிறது இதனை வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமான மேத்யூ, ஷைனி ஆகியோர் தான் படத்தை நகர்த்திச்செல்லும் முக்கியமான பாத்திரங்கள்.  மேத்யூ, ஃபிடா ஆகியோர் கல்லூரி கால தோழர்கள் மேலும் தொழிலும் ஒன்றாக் இருக்கிறார்கள். இவர்களை ஷைனி ஒன்றாக இருக்கிறார்கள், பழகுகிறார்கள் என எப்போது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். தேள் போல கடினமான வார்த்தைகளை எளிதாக பேசுகிறார்.  இதில் ஃபிடா திருமணமாகி விவாகரத்த

சந்திப்போமா - அன்பரசு - சபாபதி கடிதங்கள்

படம்
3 அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கடிதம் எழுத தாமதம் ஆகிவிட்டது . அலுவலகம் , ஹாஸ்டல் என அலைந்து திரிகிறேன் . இந்த அவதிதான் பிரச்னை . தனி அறைக்கு வந்து சில பொருட்களை வாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ரெடி ஆகிவிட்டேன் . வேறுவழி ஏதும் இல்லை . படிக்கின்ற மாணவர்களோடு சேர்ந்து இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் அழுத்தமாக இருக்கிறது . இரவு முழுவதும் விளக்கு எரியவில்லையென்றால் , என் அருகிலுள்ள படுக்கைக்காரர் பதற்றமடைந்து விடுகிறார் . எப்படி இங்கே தங்கியிருப்பது என நினைத்தேன் . எப்படியோ நான் முதலில் வேலை செய்த பத்திரிகையில் இருந்த நண்பர் எனக்கு அறையைப் பிடித்து தந்துவிட்டார் . சிறிது நிம்மதியாக இருக்கிறது . கவச்சம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன் . வெகுளியான நாயகன் , பேராசை பிடித்த நாயகி என்ற ஒன்லைனில் கதை பயணிக்கிறது . டான்சையை எட்டி உதைப்பது ஆடி பீதியைக் கிளப்பியவர்தான் இந்தப் படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ் . அவரின் ரியாக்ஷன்களைப் பார்க்க சகிக்கவில்லை . சொத்துக்காக நடைபெறும் சதியும் , துரோகமும்தான் படத்தின் கதை . சில ட்விஸ்டுகள் நன்றாக இருக்கின்றன . ஆனால் அவை

பகிர்ந்து வாழ்வதே மில்லியனிய லட்சியம்!

படம்
பகிர்ந்து வாழ்வோம் - தப்பே இல்லை! நீங்கள் சொந்தமாக வீடு வைத்திருந்தால் பெருமையாக இருக்கும். ஆனால் அதற்கான பராமரிப்பு என்ற விஷயம் வரும்போதுதான் செலவு தேள் கடித்தாற்போல கடுகடுக்கும். மாருதி காரே வைத்திருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை ஓட்டிப் பார்ப்பது, சர்வீஸ் செய்வது என செலவுகள் இழுக்கும். இப்போது இப்படி யோசியுங்கள். சென்னையில் கட்டி வைத்த வீடுகளில் ஒன்றை வாடகை அல்லது லீசுக்கு பேசி வாடகைக்கு பர்னிச்சர்களை தரும் ஸ்டார்ட்அப்களில் பணம் கட்டி பொருட்களை வாங்கினால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள். மேலும் இதற்கு நமக்கு தேவைப்படுவது தேய்மானச்செலவு மட்டுமே. இன்று வேலை காரணமாக அங்குமிங்கும் ஏரியாவாரியாக அலையும்போது நாம் வாங்கி குவிக்கும் பொருட்கள் பெரும் சுமை. 1980 களில் ஒருவரிடம் என்ன இருக்கும்? நிலம், வீடு, தங்கம், கால்நடை என இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் லேப்டாப், ஹெட்போன், உடைந்த திரை கொண்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். எங்கேனும் செல்வதற்கு சைக்கிளில் செல்வார்கள். வாழ்க்கை சுமை க

எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?

படம்
மிஸஸ் டக்ளஸ் வெற்றியாளன் நண்பர்கள் உள்ள எவனும்  தோற்றுப்போனவன் இல்லை. நம்பிக்கை பிரார்த்தனை உங்கள்  நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது. நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும். சிறப்பாக செய் எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு. அல்லது சிறப்பாக இரு.  அல்லது புதுமையாகவாவது இரு.  அக்கறை நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள்.  நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை.  நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008