இடுகைகள்

மினி கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு உகந்த காலணி!

படம்
    cc       சூழலுக்கு உகந்த காலணி ! பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கலந்து பெரும்பாலான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . இவை பயன்பாடு குறைந்து குப்பையாக வீசப்பட்டாலும் கூட எளிதில் மட்குவதில்லை . இதன் காரணமாக கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாகள் ஒருவகை பாசியை பகுதிப்பொருட்களாக கொண்ட காலணிகளை தயாரித்துள்ளனர் . இக்காலணி , பயன்பாடு முடிந்தபிறகு பதினாறு வாரங்களில் மண்ணில் மட்கிவிடும் . பாசியிலிருந்து பெறப்படும் எண்ணெய் இதற்கு முக்கியப் பொருள் . இந்த எண்ணெய்யிலிருந்து பாலியூரத்தின் நுரை பெறப்பட்டு அதோடு பல்வேறு செயற்கைப் பொருட்கள் கலந்து காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . ‘’’ தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இக்காலணியில் இயற்கையான பகுதிப்பொருட்கள் 52 சதவீதம் உள்ளன . இவற்றை நாங்கள் விரைவில் 100 சதவீதமாக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேஃபீல்டு . வணிக ரீதியில் பிற காலணிகளைப் போலவே அதிக காலம் உழைக்கும்படியான பகுதிப்பொருட்களை தற்போது சோதித்து வருகின்றனர் . விரைவில் சூழலைப் பாதிக்காத காலணிகள் நமக்கு கிட