இடுகைகள்

குடல்புண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முகத்தில் ஏற்படும் வாதம், டைபாய்டை பரப்பிய சமையல்கார பெண்மணி - மிஸ்டர் ரோனி

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி டைபாய்ட் மேரி என்று அழைக்கப்படுபவர் யார்? அமெரிக்காவில் வாழ்ந்த சமையல்காரர் மேரி மலோன், டைபாய்ட் மேரி என அழைக்கப்பட்டார். இவர் உடலில் டைபாய்ட் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த நோயால் அவர் பெரியளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் சமையல் செய்த இடங்களில் நிறையப்பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 51பேர் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்றுபேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். எனவே, அரசு மேரியை 1907-1910, 1914-1938 ஆண்டுகளில் நார்த் பிரதர் தீவில் அடைத்து வைத்திருந்தது. நியூயார்க் சுகாதாரத்துறை, இனி சமையல் பணிகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தது. ஆனால், மேரிக்கு சமையல் வேலை மட்டுமே தெரியும் என்பதால் அதே வேலையை பிடிவாதமாக செய்தார். அவர் உடலில் இருந்த நுண்ணுயிரிகள் பலருக்கும் பரவி டைபாய்ட் நோயாளிகள் அதிகமானார்கள். எனவே, அரசு சுகாதாரத்துறை மேரியை பிடித்து நார்த் பிரதர் தீவில் அவர் வாதம் வந்து சாகும்வரை 1938ஆம் ஆண்டு வரை சிறையில் அடைத்து வைத்தது. குடல்புண் உருவாக காரணம் என்ன? மன...

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்...