இடுகைகள்

புத்தக விமர்சனம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குருவைக் கொல்ல கையில் வாளெடுக்கும் சீடன் - முதல் யுத்தம் -பாலகுமாரன்

படம்
ஜிபி முதல் யுத்தம் பாலகுமாரன்.   சேரதேசத்தில் இருந்து அருண்மொழிப்பட்டன் சோழதேசத்திற்கு குதிரையில் வரும்போது கதை தொடங்குகிறது. காந்தளூர்க் கடிகைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் போர்ப்பயிற்சியும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சியும் முடித்துவிட்டு தஞ்சைக்கு வருகிறான். உபதளபதி தகுதியில் அவனுக்கு பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனுக்கு அதைவிட அவனது காதலி சுந்தரியைப் பார்த்துவிட்டு தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுகிறதா என்ன? இதற்கான விஷயங்கள் அவனது குரு குஞ்சன் நம்பூதிரியிடமிருந்தே கிடைத்துவிடுகிறது. அவன் கையில் வெள்ளிக்கேயூரம் கட்டப்பட்டு வெளியேறும்போது, நாம் அனைவரும் விதியின் கைப்பாவைகள். நீயும் நானும் கையில் வாளோடு எதிரெதிராக நிற்கும் சூழல் இருந்தால் என் உடலை அங்கஹீனம் செய்யாமல் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்கிறார். முதலில் நமக்கு இதைப்ப்படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்த சில பகுதிகளைப் படிக்கும்போது, அந்த வார்த்தை எதிர்காலத்தை ஏறத்தாழ கணித்தபடியே குரு   கூறியிருக்கிறார் என்று உணர

எம்.முகுந்தனின் தாய்ப்பால் எப்படி? - புத்தகத்திருவிழா 2019 ஸ்பெஷல்

படம்
புத்தக விமர்சனம் தாய்ப்பால் மலையாள மூலம்: எம்.முகுந்தன் தமிழில்: தி.சு. சதாசிவம் சாகித்திய அகாதெமி எம்.முகுந்தனின் கடவுளின் குறும்புகள் என்ற நூலை மட்டுமே முன்னர் படித்த நினைவு. ஆனால் இச்சிறுகதைகள் வேறு ரகம். இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் நேரடியான கதை சொல்லும் முறை போல படிக்கும் போது தோன்றும். இடையில் அப்படியே கதையை மூடுபனியாக சில உணர்ச்சிகள் மறைக்க வாசகனுக்கு எழும் திகைப்புதான் முகுந்தனின் வெற்றி . தாய்ப்பால் கதை தரும் திகைப்பு வேறுவிதமானது. சிறுவனுக்கு பாலூட்டி, குழந்தைக்கும் பால் கொடுப்பதால் தாயின் உடல்நலம் கெடுகிறது. மருத்துவர் இது தவறான அணுகுமுறை என தடுத்தும் அம்மாவின் பாசம் அனைத்தையும் வெல்கிறது. ஆனால் கணவருக்கு பாசவெறியின் இறுதிக்கட்டம் கண்ணில் தெரிய மகனை தனியறையில் அடைத்து தாய்ப்பால் வெறியை தணிக்க முனைகிறார். என்ன ஆனது என்பது திகைக்க வைக்கும் இறுதிப்பகுதி. தொகுப்பிற்கு தாய்ப்பால் என்பது ஏன் பொருத்தமான பெயர் என அதிலேயே தீர்மானித்து கொள்ளலாம். புகைப்படத்தின் மையம் இன்றைய மீடூ காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட அதிரடி கதை. புகைப்படம் எடுக்கும் ஆசை சிறுமியை எ

மாண்டிசோரியின் கல்வி - நூல் எப்படி?

படம்
மாண்டிசோரியின் குழந்தைக் கல்வி மீனாட்சி சிவராமகிருஷ்ணன் முல்லை பதிப்பகம் இந்த நூலில் குழந்தையின் அடிப்படைகளை மாண்டிசோரி விளக்கியுள்ளார். ஆனால் அதை எழுதிய மீனாட்சியின் மொழிதான் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது. தாயின் கருப்பையில் சொகுசாக இருக்கும் குழந்தை, அதிமுயற்சி செய்து வெளியே வருவது எப்படியிருக்கும் என எழுதியிருப்பது புதிதாக உள்ளது. வளர்ந்த மனிதர்களின் ஒழுங்கு, குழந்தைகளின் ஒழுங்கு என்பதை மாண்டிசோரி எளிமையான உதாரணங்களின் மூலம் விளக்கியுள்ளது அருமை. இதிலும் மனமும், உடலும் ஒருங்கிணைந்து உள்ள புதுமைத்திறன் பற்றி விளக்கும் அத்தியாயம் பரவாயில்லை. புரிந்துவிட்டது. தியரியாக அதனை மீனாட்சி விளக்கியுள்ளது கடுமையாக உள்ளது. ஆனால் உதாரணங்களிலிருந்து தியரியை புரிந்துகொள்வதை வாசகர்கள் முயற்சிக்கலாம். அது நல்ல முயற்சியாக இருக்கும். மொழிபெயர்ப்பு என்பதை ஒரு நூலுக்கு ஒருவர் என விதியாக வகுக்காமல் வேறு சிலர் செய்திருந்தால் நமக்கு நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்திருக்கும். நன்றி: யெஸ்.பாலபாரதி - கோமாளிமேடை டீம்

அடிமை முறையின் வேர்!

படம்
ஏழு தலைமுறைகள்(சுருக்கம்) அலெக்ஸ் ஹேலி தமிழில்: எத்திராஜூலு சிந்தன் புக்ஸ் ரூ.150 (நான்காவது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA) ஏழுதலைமுறைகள் எனும் அலெக்ஸ் ஹேலி எழுதிய மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 900 பக்கங்கள் தாண்டும். அதைத்தான் படிக்கவேண்டும் என எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கூறினார். ஆனால் வாங்கிய நூலை அதற்காக தள்ளி வைக்கவா முடியும்? ஆப்பிரிக்க கிராமத்தில் தொடங்கி அமெரிக்கா வரை செல்லும் அடிமைகளின் வேதனைகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் நூல். எழுத்தாளர் அலெக்ஸ் ஹோலி பனிரெண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் இது. ஒருவகையில் இது அவரின் பாரம்பரிய வரலாற்றை தேடும் முயற்சியும் கூடத்தான். ஆப்பிரிக்க கிராமத்தில் உமரோ பிண்ட்டே தம்பதியின் மகனாக பிறக்கும் குண்ட்டா கிண்ட்டேயின் குடும்ப வரலாறுதான ்கதை. குண்ட்டா கிண்ட்டேதான் அவர்களுடைய மாண்டிங்கா இனத்தின் தந்தை. அவரின் இரண்டாம் மனைவி ஆயேஷா மகன்தான் உமரோ.  குண்ட்டா கிராமத்து வாழ்வில் இயற்கையுடன் வாழும்போது ஏற்படும் வளம் வறுமை துன்பம், சந்தோஷம், கொண்டாட்டம், விழாக்கள் என அனைத்தையும் வாசகர்களுடன் பகிர்கிறார். வேட்டையாடும் ப