இடுகைகள்

பொய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நா

பேச்சில் முரண்பாடுகளைக் கொண்ட சைக்கோபாத்கள்-!

படம்
  சைக்கோபாத்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். முக்கியமான கொலைக்குற்றங்களை செய்தவர்களைப் பற்றி அமேசானில் தட்டினால் ஏராளமான நூல்கள் உங்களுக்கு படிக்க கிடைக்கும். அதெல்லாம் அவர்களைப் பற்றி நமக்கு கூறப்படாத உண்மையொன்றைக் கூறும்.அவர்கள் நூல்கள் வெளிவந்து அல்லது வழக்கில் பிடிபட்டபிறகு சைக்கோபாத்களாக மாறினார்களா, அதற்கு முன்பே அப்படி இருந்தவர்கள்தான் என்பதுதான். உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் சைக்கோபாத்களால் மன உளைச்சலை அடைகிறார்கள். அழுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், வேலையை விடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது துறையில் உள்ள பல்வேறு சைக்கோபாத்கள் என அவர்கள் அறிந்த ஆனால் உலகம் அறியாத மனநல குறைபாடு கொண்டவர்கள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைகளை ஒருங்கிணைத்து பெற்றுத் தருபவர் இருப்பார். இந்த நபர் சரியாக இருந்தால் வேலை நடக்கும். எளிதாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வேலை தாறுமாறாக இருக்கும். இவர்களைப் பொறுத்தவரை யாருக்கும் நட்பாக இருக்க முடியாது. ஆனால் மேலே இருப்பவர்களின் குறியை நக்கி, தனக்கு கீழே இருப்பவர்களின் புட்டத்தை புதைத்து தள்ளி வா

கொலையாளியின் இனம்புரியாத வசீகரம்

படம்
  சைக்கோபதி செக்லிஸ்டை ஒருவர் பயன்படுத்தினால் அதை பரிசீலிக்க தகுதிபெற்ற உளவியலாளர் தேவை. இல்லாதபோது நிறைய குழப்பங்கள் ஏற்படும். சாதாரணமாக நீங்கள் பார்ப்பவரிடம் செக்லிஸ்டில் உள்ள சில அறிகுறிகள் காணப்படலாம். அதற்காக அவர் சைக்கோபாத் ஆகிவிட மாட்டார். சைக்கோபாத் என்ற வார்த்தைக்கு கூட்டாக நிறைய அறிகுறிகள் உள்ளடங்கும். மயக்கும் வசீகரம் சைக்கோபாத்கள் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைப்பார்கள். தான் ஒருவரை கவர வேண்டும், அவரால் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் துறை சார்ந்த சொற்களை, வார்த்தைகளை, ஆளுமைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது ஒருவரை கவர்ந்து தான் சொன்னபடி செய்யவைக்க வேண்டும் என்பதுதான். எனவே நாடகங்களில் மனப்பாடம் செய்து குழந்தைகள் ஒப்பிப்பார்களே அப்படி பேசுவார்கள். முகத்திற்கு முன்னாடியே   புகழ்ந்து ஒருவரை வீழ்த்துவது, புகழ் வெளிச்சம் கிடைப்பதற்காக தன்னை மேதாவியாக பாவித்து பேசுவது ஆகியவற்றை செய்வார்கள்.     எக்கோஸ் இன் தி டார்க்னெஸ் என்ற நாவலில் ஜோசப் வாம்பாக் உருவாக்கிய வில்லியல் பிராட்ஃபீல்ட் என்ற பாத்திரம் சைக்போபாத்தான். இவர் அனைவரிட

கொலைக்கு காரணம் பலவீனமான நபர்கள்தான் - பொய்யின் பலமும், பலவீனமும்

படம்
  கொலைகளை செய்பவர்கள் மாட்டிக்கொண்டால் என்ன சொல்லுவார்கள்? நான் செய்யவில்லை என்பார்கள். இல்லையென்றால் கொலைக்கு காரணம் கொலையானவர்கள்தான் அவர்கள் தான் அப்படிசெய்ய தூண்டினார்கள் என்று கூட கூறுவது உண்டு. இதெல்லாம் இல்லாமல் நினைவிழப்பு, அம்னீசியா, ஆளுமை பிறழ்வு என்று பலவித நோய்களை சொல்லி தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்பவர்களும் கூட உண்டு.   சைக்கோபதி செக்லிஸ்ட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கைதி ராபர்டிடம் பேசினார். அப்போது அவர், தன்னால் கொலையானவர்களுக்கு நல்ல விஷயம்தான் நடந்துள்ளது என்றார். கொலை செய்த காரணத்தால்தான் கொலை செய்யப்பட்ட தரப்பினரின் பேட்டி, செய்தி, முகங்கள் வெளியில் தெரிந்தன. நாளிதழ்களில் பெண்கள் என்னைப் பற்றி நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். சிலர் எனக்கு நன்றி கூட தெரிவித்திருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்தவில்லை என்றுதானே ஆகிறது என நேர்மறையாக பேசினார்.   அலுவலக அரசியல்களால் வேலையிழந்தவர்கள் தங்களைப் பற்றி கழிவிரக்கமாக பேசி புலம்புவதைப் போலவே தொடர் கொலைகாரர்களும் பேசுவது உண்டு. ஆனால் அவர்கள் பேசுவது கொன்றவர்களை விட அவர்களை கொலை செய்த தான்தான் மிகவும் பாவம்… சபிக்கப்

விழிப்புணர்வுடன் செய்யப்படும் கொலைகள்- ராபர்ட ஹரேவின் பணிக்கால வாழ்க்கை

படம்
  கொலைகளை செய்கிறார்களே இவர்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதாக என சிலர் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது. தான் செய்வது என்னவென்று செய்யும் கொலையாளிகளுக்கு தெரியும். அவர்கள் அதற்கான இயல்பில்தான் கொலைகளை செய்கிறார்கள். அதை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கிறார்கள். இதில் சைக்கோபாத்களுக்கு உள்ள பொதுவான தன்மை, சிறுவயதில் வன்முறையை, அவமானங்களை, மாறாத துயரங்களை அனுபவிப்பது. இப்படி பாதிப்புகளை எதிர்கொள்ளும் அனைவருமே பிறரை கொல்வதில்லை. சமூகத்தை வதைப்பதில்லை. சிலர் மட்டும் அந்த வலியில் இருந்து மீளாமல் நின்றுவிடுகிறார்கள். பிறகு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத வலியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நாம் சரியாக அடையாளம் காணாதபோது நாமே கூட அவர்களுக்கு இரையாகி இறந்துபோகலாம். ஏன் இறந்தோம் என்பதற்கான காரணத்தைகொலைகாரர் பிடிபடும்போது கூறுவார். அல்லது அவரது பினாமியாக பத்திரிகையாளர்கள் நூல்களை எழுதுவார்கள் கே.என்.சிவராமன் போல நூல்களை சாதனை விலையில் விற்பார்கள். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறதுதான். இன்று சமூகத்தில் நிலவும் பிரச்னை என்னவென்றால் குற்றத்தைப்

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

படம்
  புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன? வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ... பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங்  5 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபாய் தனது 

பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது?

படம்
  குற்றத்தை ஒப்புக்கொள்ளுவார்களா? சாதாரணமாக நாம் செய்த தவறுகளைக் கூட ஈகோ பார்த்து நானா, செய்யவேயில்லையே என கூறுவோம். வேறுவழியின்றி அதனை நிரூபித்தால் இதற்காகத்தான் செய்தேன் என்று கூறுவதுதானே உலக வழக்கம். இந்தவகையில் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை குற்றம் செய்த உணர்ச்சிகள் இருக்காது. காவல்துறையினர் கடுமையாக முயற்சி செய்து தந்திரங்கள் செய்து அவர்களை விசாரணையால் மிரட்டலாம். அதில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தை உணர்ந்தால் அவர்களே நான் தான் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்வார்கள். அப்படியில்லாதபோது எளிதில் தங்களை காவல்துறையில் ஒப்படைக்க மறுப்பார்கள்.  என்னதான் குற்றங்களை செய்தாலும் கூட காவல்துறை அதில் பெரிய ஈடுபாடு எடுத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதபோது யாருக்குமே போரடிக்குமே? மேலும் சீரியல் கொலைகார ர்களுக்கு தாங்கள் செய்த பல்வேறு விஷயங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமென நினைப்பு வேறு இருக்கும். இதனால் காவல்துறையில் தானாகவே சரண்டர் ஆவது நடைபெறும். இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி பிரபலம் ஆன கதைகளும் உண்டு.  பொய் சொல்லச் சொல்லாதே ஒருவர் உண்மை பேசுகிறாரா, அல்

சுவாரசியமான செய்தி வெறியால் அழிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக அறவழியில் பழிவாங்கல்! - பினாக்கியோ - கொரிய தொடர் - இறுதிப்பகுதி

படம்
        பினாக்கியோ இறுதிப்பகுதி கொரியதொடர் எம்எக்ஸ் பிளேயர் டிவி சேனல் நேர்காணலில்... மொத்தம் இருபது எபிசோடுகள்தான் . முதல் பகுதியில் தீயணைப்பு வீரரான ஒருவர் கட்டிடம் ஒன்றில் தீயணைக்க செல்கிறார் . அங்கு தகவல் கொடுப்பவர் செய்யும் குளறுபடியால் தீயணைப்பு வீரர்கள் அனைவருமே கேஸ் வெடித்து இறக்கும்படி ஆகிறது . உண்மையில் இதற்கு பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் அவருக்கு உதவியாக அரசியல்வாதியும் உள்ளனர் . ஆனால் இந்த உண்மை வெளியே வரக்கூடாது என தொழிலதிபர் பங்குகளை வைத்துள்ள எம்எஸ்சி என்ற ஊடகத்தின் செய்தியாளர் சாவோக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது . முதலில் உண்மை , நேர்மை , கண்ணியம் , கட்டுப்பாடு என்பவர் இறுதியில் வாய்ப்புதான் வசதியைக் கொடுக்கும் என சலனப்பட்டு டீலுக்கு ஒகே சொல்லுகிறார் . செய்திகளில் வீரர்கள் இறப்புக்கு தீயணைப்பு வீரர்களின் தலைவர்தான் காரணம் என கட்டம் கட்டுகிறார் சாவோக்கி . இதனால் மக்களின் கோபம் முழுக்க தீயணைப்பு வீரரின் குடும்பம் மீது திரும்புகிறது . இப்படி மக்களின் வெறுப்பினால் தீயணைப்பு கேப்டனின் மகன்கள் கி ஜே மியூங் , ஹோமி யூங் ஆகியோரின் வ

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள

கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!

படம்
பொய் சொல்லும் கண்கள்? போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள். தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை. ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது. இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால்