கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!
பொய் சொல்லும் கண்கள்?
போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள்.
தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை.
ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது.
இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால் உண்மைகளைச் சொல்லுவதில்லை. அதனைக் கண்டுபிடிக்க இச்சோதனை உதவும்” என்கிறார் ஆய்வாளர் அலிசா.
நன்றி: நியூ அட்லஸ்