தடுமாறும் தொழிற்சாலைகள்!- வழி என்ன?
இந்தியாவில் மாருதி, டாடா, மஹிந்திரா ஆகியோர் தமது வேலைநாட்களை குறைக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம். இது அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்டது போலத்தான். இதன் தாக்கத்தை சீனா, இந்தியா விரைவில் உணரும். ஜெர்மனி மற்றும் சீனாவில் ஏற்கனவே பாதிப்பின் தாக்கம் தொடங்கிவிட்டது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை பெருமளவு வாங்குபவர்கள் அமெரிக்கர்கள்தான். இப்போது வர்த்தகப்போர் பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. சீனா உடனடியாக தன் பொருட்களுக்கான சந்தையைத் தேடாதபோது, அதன் உற்பத்தி முடங்கி தொழிலாளர்கள் வேலையிழக்க வேண்டி வரும்.
அமெரிக்காவில் தேக்கநிலை முன்பிருந்தே இருப்பதால், இப்போது பெரியளவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் சீனா அப்படியல்ல. 17 ஆண்டுகளில் இல்லாத அளவு தொழிற்சாலை உற்பத்தி குறைந்துள்ளது. பிரேசில், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இருக்கும் சூழலில் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடி வருகின்றனர். இந்தியாவில் வாகனத்துறை 19 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிலுள்ள நிசான் நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. பிற நிறுவனங்களும் இதேமுறையில் உற்பத்தி, நஷ்டத்தை சமாளிக்க முயற்சிக்கலாம்.
நன்றி: OZY Special Briefing,
படம் -