81 ஆண்டுகள் புகழ்பெற்ற பீட்டில் கார்!






Image result for volkswagen



பீட்டில் கார்

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற கார். ஹிட்லரை வெறுத்தாலும் அவர் உருவாக்கிய இந்த ஃபோக்ஸவேகன் பீட்டில் கார், அதன் சிக்கனத்திற்காக பெரிதும் மக்களால் விரும்ப ப்பட்டது. 1960களில் இக்கார்தான் அதிகம் வாங்கப்பட்ட கார். சுமார் 23 மில்லியன் கார்கள் இதுவரை விற்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த மாதம் பீட்டில் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. காலம்தோறும் மாறிவரும் கார்களின் பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களை கிளாசிக் காரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?   ஆனால் தயாரிப்பாளர்கள் சுலபமாக பீட்டில் என்ற காரை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது. காரணம். இக்காரின் எலக்ட்ரிக் வெர்ஷனைக் கொண்டுவரப்போகிறோம் என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது.

1933 ஆம்ஆண்டு ஹிட்லர் அமெரிக்காவின் ஃபோர்டு டி மாடல் காரை காரசாரமாக விமர்சித்தார். டிமாடல் கார் மக்களின் வர்க்கவேறுபாடுகளை அதிகரித்த து தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று பேசினார். இதனை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரசுரித்தது.

பீட்டில் கார் உருவாக்கப்பட என்ன காரணம், ஐந்துபேர் பயணிக்கும்படியான எளிமையான கார். பாகங்கள் எளிதில் கிடைக்கும்படியான கார் என்பதுதான் ஹிட்லரின் எண்ணமாக இருந்தது. உண்மையில் அமெரிக்காவில வெளிவந்த கிளாசிக் கார்களின் விலை மிக அதிகம். அதற்கு மாற்றாக பீட்டில் கார் விற்பனையில் பட்டையைக் கிளப்பியது.

1968 ஆம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கார் கேடிஎஃப் வேகன் என்று அழைக்கப்பட்டது. பின் மக்கள் கொடுத்த பெயரான விடபிள்யூ என்ற பெயரை ஃபோக்ஸ்வேகன் பெற்றது. அதன் ப்ரௌச்சரில் டெர் காஃபெர் என்ற பெயரை தன் காருக்கு வைத்தது. இதன் பொருள், தி பீட்டில் என்பதுதான்.


நன்றி: க்வார்ட்ஸ்