குற்றத்தை துணிந்துசெய்! - டூ கன்ஸ் சொல்லும் பாடம் இது!








Movie Review 57: 2 Guns











சினிமா விமர்சனம்



2 Guns Movie Review | by tiffanyyong.com



மார்க் வால்பெர்க் ஸ்பெஷல்!

டூ கன்ஸ்!( 2013)


இயக்கம் பால்டாஸ்கார் கோர்முகார்

திரைக்கதை - பிளாக் மாஸ்டர்ஸ்

இசை கிளிண்டன் சார்டர்

ஒளிப்பதிவு - ஆலிவர் வுட்


ராபர் பாபி பீன்ஸ், டிஇஏ துறை அதிகாரி. அவர் ஸ்டிக்மன் என்பவருடன் சேர்ந்து கொள்ளை, வழிப்பறி செய்து வருகிறார். இவர் போலீஸ் என்பது ஸ்டிக்மனுக்கு தெரியாது. பாபியின் நோக்கம், மெக்சிகோவைச் சேர்ந்த பாபி கிரிகோவை போதைப்பொருள் சகிதமாக போலீசில் சிக்க வைக்கவேண்டும் என்பதுதான் பிளான். அதற்கான முயற்சி சொதப்புகிறது. இதனால், வங்கியிலிருந்த பணத்தை திருடி அந்தப்பழியை கிரிகோ மீது போடுகிறார்கள். அப்போது ஸ்டிக்மனுக்கு பாபி போலீஸ் என்பது தெரிய வருகிறது. உடனே அவரைக் காயப்படுத்திவிட்டு பணத்தை திருடிச்செல்கிறார். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். ஸ்டிக்மனும் சீல் படை அதிகாரி என்பது பாபிக்கு தெரியவருகிறது. அவருடைய மேலதிகாரி சொல்படி பணத்தை வங்கியில் கொள்ளையடித்து சில முயற்சிகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள்.

இதனால் கிரிகோ, சிஐஏ ஆகியோரினால் துரத்தப்படுகிறார்கள். பாபி, ஸ்டிக்மனை மன்னித்தாரா, இருவரும் ஒன்றாகி எதிரிகளை போட்டுத் தள்ளினார்களா என்பதை மெக்சிகோ இசை ஒலிக்க படம் பார்த்து மகிழலாம். பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். இது காமிக்ஸ் புக் என்பதால் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன.


2 Guns: Film Review | Hollywood Reporter


மார்க் வால்பெர்க், டென்சில் வாசிங்டன் என இருவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். பாலா பாட்டன் சில காட்சிகளில் வந்து நம் இடுப்பிற்கு கீழே சில அசைவுகளுக்கு உதவுகிறார் அவ்வளவே அவர் பங்கு. அப்புறம் பாவி செத்துட்டாளே என்று இரக்கம் கூட வராதபடி சாகிறார்.

ஓயாத துப்பாக்கிச்சத்தத்தில் குற்றமே ரசிக்கும்படி ஆகி விடுகிறது. என்னத்தைச் சொல்ல, குற்றம் சார்ந்த படம் என்றாலும் அதனையும் ரசிக்கும்படி அவல நகைச்சுவையாக செய்திருக்கிறார்கள்.

மார்க் வால்பெர்க் செய்யும் காமெடிகள் அதிரிபுதிரியாக சிரிக்க வைக்கின்றன. சண்டைக்காட்சிகளும் பரபரக்க வைக்கின்றன. நேந்திரம் சிப்ஸ் வைத்துக்கொண்டு ரசித்து பார்க்கவேண்டிய படம் இது.

கோமாளிமேடை டீம்