மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

Sylvia Rivera Cover TKTKTK

மாற்றுப்பாலின சாதனையாளர்கள்

2

உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி!

சில்வியா ரிவேரா

அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே? பசிக்கு விபச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். அங்கே செயல்பட்டு வந்த விபச்சாரக்குழுக்களில் ஒன்றில் இணைந்தார். 

1970ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான போராட்டத்தைத் தொடங்கினார். மாற்றுப்பாலினத்தவருக்கான போராட்டங்களில் பங்கேற்றது பற்றிய சர்ச்சை ஒன்று இவரை வாழ்நாள் முழுவதும் சுழன்றடித்தது. காரணம், தான் பங்கேற்காத நிகழ்ச்சியில் மக்கள் கவனத்தை ஈர்க்க கலந்துகொண்டேன் என்று கூறிவிட்டார். பின்னாளில், மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளைப் பேசும்போது இந்த நிகழ்ச்சி ஒரு களங்கமாக மாறியது. ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் வறுமையில் உழன்ற மாற்றுப்பாலினத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களையும் மதிக்கவேண்டும் என்று சொன்ன ஒரே ஆன்மா இவர்தான். அதனால்தான் மாற்றுப்பாலினத்தவரின ரோசாபார்க்ஸ் என்ற பலராலும் கூறப்படும் பெருமைக்குரியவராக இவர் இருக்கிறார். 

 ”நான் எனது பத்து வயதில் தெருவுக்கு வந்துவிட்டேன். என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. போலீசார் தூங்கும் என்னை தட்டி எழுப்பி கைது செய்துகொண்டு அழைத்துச்செல்வது இயல்பானது. என்னுடன் தங்கியிருந்த ஜூலியா என்ற பெண்ணைப் பார்த்தவர்கள் என்னை லெஸ்பியன் என்று தூற்றினர். ஆனால் அவர்களிடம் கூறினேன் நான் சில்வியா ரிவேராதான். வாழ்க்கை முழுவதும் இதே பெயர்தான்” என்று ஒருமுறை கூறினார். 


அதேசமயம் உரிமைக்கு குரல் கொடுக்கும் போது இவருக்கு வரும் அசாத்திய கோபம் பலமுறை மாற்றுப்பாலினத்தவருக்கு எதிராகவும் சென்றிருக்கிறது. ஆனால் இவரது ஸ்டார் அமைப்பு, இவரது செயல்பாடுகள் அதனைத் தாண்டிய கரிசனம் கொண்டவை. கல்லீரல் புற்றுநோயால் மரணமடைந்தவர், மாற்றுப்பாலினத்தவருக்கான குரலை வலுவாக எழுப்பிய வகையில் மறக்க முடியாதவர். ஏன் முக்கியமானவரும் கூட.

ஆங்கில மூலம் - அவுட்.காம்
தமிழில்: வின்சென்ட் காபோ

பிரபலமான இடுகைகள்