ரத்தசோதனை மூலம் ஆயுளைக் கணிக்கலாமா?
pixabay |
ரத்தசோதனை மூலம் இறப்பை அறியலாம்!
இறப்பை அறிவது ஜோசியம் மூலம் நடந்தாலோ அல்லது யாராவது சொன்னாலோ நமக்கு உபயோகமாகவே இருக்கும்.அதுவும் உடலின் செல்களின் மூலம் தெரிய வந்தால் நன்றாகத்தானே இருக்கும்?
இது மனிதர்களுக்கு மகிழ்ச்சி தருமா என்று தெரியவில்லை. ஆனால் வணிக நிறுவனங்களுக்கு லாபம் தரும். இதுபற்றிய ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் உயிரியல் தடத்தை ஆராய்ந்து அவர்களின வாழ்நாளை கணிக்க முயன்றுவருகின்றனர்.
பதினெட்டு வயதிலிருந்து தொடங்கி 100 வயது வரையிலானவர்களிடம் ரத்த மாதிரிகளைப் பெற்றுள்ளனர். மொத்தம் ஆய்வுக்கு இசைந்தவர்களின் எண்ணிக்கை 44,168 பேர். இதில் 5, 512 பேர் ஆய்வு முடிவடையும் முன்னரே இறந்து போய்விட்டனர். பதினேழு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வு இது. 226 உயிரியல் அடையாளங்களை வைத்து சிலர் 5 அல்லது 10 ஆண்டுகளில் இறப்பது உறுதி செய்யப்பட்டது.
1997 ஆம் ஆண்டு தொடங்கிய ஆராய்ச்சியில் 7,603 பேர்களிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. இதில் 83 சதவீதம் அவர்களின் இறப்பை கணிக்க முடிந்தது. ரத்த மாதிரி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையை கணிக்க முடியும் என்பது என்னால் நம்ப முடியவில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் எலைன் ஸ்லாக்பூம்.
நன்றி: ஃப்யூச்சரிசம்