தடைகள் ஜனநாயக நாட்டை உருவாக்காது - சேட்டன் பகத்!
ஆபாச வலைத்தளங்களுக்கு தடை உதவாது! |
இந்திய அரசு, ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்து உத்தரவிட்டது எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதுபோன்ற தடைகளை மக்கள் மீது விதிப்பதில்லை.
காரணம், ஒன்றைப் பார்ப்பது, பார்க்காமல் இருப்பது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பானது. அதில் பெரும்பாலான உலக நாடுகள் தலையிடுவதில்லை.
மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது,போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது போன்றவைதான். இவற்றை அரசு சட்டங்கள் மூலம் தடுப்பது பயனளிக்கும். ஆனால் அரசு மக்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் தடை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. காரணம், நாம் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
இன்றுள்ள தொழில்நுட்பபடி, அரசின் தடை உத்தரவை மிக எளிமையாக உடைத்தெறிய முடியும். இதனை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
உலகமயமாதல், தாராளமயமாக்கல் விதிகளால் உலகம் என்பது நெருக்கமாகி வருகிறது. இதில் எல்லைக்கோடுகள் நிலப்பரப்பில்தானே ஒழிய இணையத்தில் கிடையாது. இந்த நேரத்தில் மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தடை என்பது தேவையில்லாத சிக்கல்களையே ஏற்படுத்தும்.
அரசு தடைகளை விடுத்து, மக்கள் பொருளாதாரரீதியாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். அது நீண்டகால நோக்கில் மக்களுக்கு பயன் அளிக்கலாம். இதுபோன்ற பொருளற்ற தடைகள் மக்கள் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா அல்லது பேச்சு, எழுத்துரிமை இல்லாத நாட்டில் இருக்கிறோமா என்று நினைக்கச் செய்கிறது.
சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் நூலைத் தழுவியது.
படம் - இந்தியா டுடே