நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?



Image result for chandrayaan 2 launch




சந்திரயான் சிறப்பிதழ்!

நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்?

அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான்.

இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.
 சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.

சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல் விண்கலம். இதன் பின்னர், 1959 முதல் 1976 வரை சோவியத் ரஷ்யா செய்த விண்வெளித் திட்டங்களுக்கான செலவு 4.5 பில்லியன் டாலர்கள். இதற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா நிலவுக்குச் செல்லும் முயற்சிகளைத் தொடங்கியது. 1968 முதல் 1972 வரையிலான காலகட்டத்தில் நாசா, 11 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது. இதற்கான செலவு 25 மில்லியன் டாலர்கள்.
 அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளோடு சீனாவும் நிலவுக்குச் செல்லும் போட்டியில் குதித்துள்ளன.

 நிலவில் நாம் பார்க்காத மறுபுறத்தில் ஆய்வுச்செய்யச் சென்ற சாங் 4 விண்கலத்தைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை சீன அரசு உருவாக்கி வருகிறது. இஸ்ரேலின் விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது மோதியது. ஆனாலும் அந்நாடு மனம் தளராமல் அடுத்த திட்டத்தை தயாரித்து வருகிறது. எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஒரிஜின் ஆகிய நிறுவனங்களும் மக்களை நிலவுக்கும், செவ்வாய்க்கும் அழைத்துச்செல்லும் முனைப்பில் உழைத்து வருகின்றன.

நிலவுக்குப் பயணித்த நாடுகள்!

லூனா 1 (சோவியத் ரஷ்யா)

அனுப்பியது: ஜன.2, 1959
திரும்பியது: ஜன.4, 1959

லூனா 2 (சோவியத் ரஷ்யா)
அனுப்பியது: செப்.12, 1959
திரும்பியது: செப்.13, 1959

லூனா 9 (சோவியத் ரஷ்யா)
அனுப்பியது: ஜன.31,1966
திரும்பியது: பிப்.3, 1966

வெற்றி -24 திட்டங்கள்
சர்வேயர் 1 (அமெரிக்கா)
அனுப்பியது: மே 30, 1966
திரும்பியது: ஜூன் 2, 1966

அப்போலோ 8
அனுப்பியது: டிச.21, 1968
திரும்பியது: டிச.24, 1968

அப்போலோ 11
நிலவில் கால் வைக்க உதவிய விண்கலம்
அனுப்பியது: ஜூலை 16, 1969
திரும்பியது: ஜூலை 20, 1969

லுனோகாட் 2 (ரஷ்யா)
அனுப்பியது: ஜன.8, 1973
திரும்பியது: ஜன.15, 1973

ஹிடேன் (ஜப்பான்)
ஆசியாவின் முதல் நிலவு விண்கலம்
அனுப்பியது: ஜன.24, 1990
திரும்பியது: மார்ச் 19, 1990

ஸ்மார்ட் 1 (ஐரோப்பா)
முதல் ஐரோப்பா விண்வெளி திட்டம்
அனுப்பியது: செப்.27, 2003
திரும்பியது: நவ.15, 2004

சாங் 1 (சீனா)
அனுப்பியது: அக்.24, 2007
திரும்பியது: நவ.5, 2007

சந்திரயான் 1
நீரைக் கண்டுபிடித்த விண்கலம்
அனுப்பியது: அக்.22, 2008
திரும்பியது: நவ.12, 2008

சாங் 4 (சீனா)
நிலவின் மறுபுறத்திற்கான ஆய்வு
அனுப்பியது: டிச.7, 2018
திரும்பியது: ஜன.2019

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா