கூகுள் அறிவியல் விருது! - மைக்ரோபிளாஸ்டிக் அகற்றும் கண்டுபிடிப்புக்காக...



Image result for Fionn Ferreira,



வெப்பமயமாதல் உலகத்தை உருக்கி வருகிறது. இந்த  நேரத்தில்தான் இலண்டன் தெருக்களில் நடந்த சூழல் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கிரேட்டா துன்பெர்க் போன்ற சிறுமிகளின் மூலம் பலரும் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். தற்போது அயர்லாந்தைச் சேர்ந்த பதினெட்டு வயது இளைஞர்,கடலில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக்கை ஒழிக்கும் வழி சொல்லி கூகுள் அறிவியல் விருதை வென்றுள்ளார்.

ஃபியன் ஃபெரிரா என்ற இளைஞர் காந்தம் மூலம் பிளாஸ்டிக்குகளை அகற்றும் முறையைக் கண்டுபிடித்துள்ளார். காந்தம் கொண்ட நீர்மமான ஃபெர்ரோஃப்ளூட் மூலம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளை அகற்ற முடியும் என இவர் கூறுகிறார். மாதிரிக்கு செய்தும் காட்டியுள்ளார்.

கூகுள் அறிவியல் விழா 2019 நடைபெற்றது. இதில் உலகம் முழுக்க 100 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து இளைஞர்களாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கலிஃபோர்னியாவிலுள்ள மௌண்டன் வியூ கேம்பசில் தேர்வு நடைபெற்றது. முதலிடம் பெற்ற ஃபியனுக்கு  50 ஆயிரம் டாலர்கள் பரிசு அளிக்கப்படவிருக்கிறது.

தனது வீடு அமைந்துள்ள பகுதியில் பாறை ஒன்றிருக்கிறது. அங்கு எண்ணெயில் அமிழ்ந்திருந்த பிளாஸ்டிக் உறை ஒன்றைப் பார்த்தேன். அப்போதுதான், பிளாஸ்டிக்கை நீரிலிருந்து இழுத்து அகற்றும் கண்டுபிடிப்பை யோசித்தேன் என்று பேட்டியில் கூறியிருக்கிறார் ஃபியன். அதேபோல இறுதியாக கூறியதும் முக்கியமானது. நான் கண்டுபிடித்த முறை பிளாஸ்டிக்கை அகற்றும்தான். ஆனால் நாம் செய்ய வேண்டியது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுதான். இம்முறையை பின்பற்றுவது அவசியம் அல்ல என்று கூறியிருக்கிறார்.

இப்போது தெரிகிறதா ஜென் இசட்டுகள் ஏன் ஜொலிக்கிறார்கள் என்று......


நன்றி- இகோவாட்ச்


பிரபலமான இடுகைகள்