போரடிக்குதா மக்களே! - சூப்பர் டேட்டா!




Image result for boredom



போர் அடிக்குது என்று சொல்வதை இமைக்கா நொடிகள் போன்ற திரில்லர் படம் பார்க்கும்போது கூட நம்மால் சொல்ல முடிகிறது. காரணம், நாம் பார்க்கும் ஏராளமான திரைப்படங்களால் அடுத்து வரும் காட்சியை வேகமாக ஊகிக்க முடிகிறது. இதன் காரணமாக சினிமாவும் சலித்துப்போக வேறு ஊடகங்களை நோக்கி நகர்கிறோம். இதெல்லாம் பள்ளி, கல்லூரி என போரடிக்கும் போர்க்களங்களைத் தாண்டித்தான் நடக்கிறது.

பள்ளியில் கணக்கு, அறிவியல் குறிப்பாக சமூக அறிவியல் போன்ற பாடங்களில் சரிந்துவிழாத தலைகளே கிடையாது. எப்படி நிறுத்திவைத்தாலும் மாணவர்களின் தலை பொசுக்கெடீரென மேசையில் மோதும். விண்கல் மோதுவதைக்கூட இப்படி ரசித்துப் பார்க்க முடியாது. அப்போது சமூக அறிவியல் ஆசிரியை ராஜம்மா டீச்சர், காதைப்பிடித்து இழுத்துச் சொல்லுவார். நீ இப்படித்தூங்கினா சட்டி சுரண்டத்தான் லாயக்கு என்ற அவரின் டயலாக் அன்று ஒன்பது, பத்தாவது மாணவர்களின் மத்தியில் அப்படி ஒரு பிரபலம். மேல்மருவத்தூர் பராசக்தியின் தீவிர பக்தை, தீக்கனல் கண்ணில் தெறிக்க பேசுவது அந்த சாமியே வந்து நமக்கு சாபம் விடுவது போலத் தெரியும்.

எனக்கு பொதுவாக போரடித்தால் உடனே கண்களை மூடிக்கொள்வேன். விண்டோசின் நீலத்திரைபோல தூக்கம் என்னை போர்த்திவிடும். ஆனால் இன்று மாணவர்கள் அப்படியெல்லாம் உடனே ஓய்ந்து போவது கிடையாது.

சரி, போரடிப்பதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். 

கோடைக்கால விடுமுறை தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே மாணவர்கள் போரடிக்கிறது என்று சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள்.

குறைந்தது நான்கு முறை போரடிக்கிறது என்று மாணவர்கள் சொல்லுகிறார்கள்.

ஆண்டுக்கு 131 நாட்கள் அமெரிக்கர்கள் தமக்கு போரடிப்பதாக கூறுகின்றனர்.

அமெரிக்காவின் தேசிய ஆரோக்கிய தகவல்தள வலைத்தளத்தில் போரடிப்பது பற்றி, 7138 ஆய்வுகள் உள்ளன.

கூகுளிலுள்ள மாணவர்கள் சலிப்பு பற்றி எழுதி விவாதித்துள்ள கட்டுரைகளை 12,300 பேர் படித்துள்ளனர்.

2017 ஜூலை 11 - 2019 ஜூலை 11 வரையிலான காலத்தில் க்வார்ட்ஸ் வலைத்தளத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சலிப்பு பற்றிய கட்டுரையை  5 லட்சம் பேர் படித்துள்ளனர்.

நன்றி: க்வார்ட்ஸ்