விந்தணுக்களைப் பெருக்கும் மரிஜூவானா!






Image result for marijuana
truthout


மரிஜூவானா குழந்தை பேறுக்கு உதவுமா?

ஆம் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இன்று உலகமெங்கும் சோதனைக்குழாய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. காரணம், ஆண், பெண் என தம்பதிகள் இருவருக்கும் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்தான் காரணம். பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி எனில் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சி பெறாமை, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இது உடலுறவில் திருப்தி என்பதைக் கடந்து குழந்தைப் பேற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள டி.ஹெச். சான்ஸ் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நடைபெற்றபோது, அதில் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா எடுத்துக்கொண்டனர். அதோடு அதனை புகைக்காதவர்களைக் கணக்கிலெடுத்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த து. உடனே எங்கு கிடைக்கும் மரிஜூவானா என கூகுளிடம் கேட்காதீர்கள். அப்படி புகைப்பது தமிழகத்தில் சட்டவிரோதம்.

இந்த ஆய்வு நடக்கும்போது, ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா புகைத்தனர். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களுக்கான தடைகள் விலக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுபோன்ற ஆய்வுகள் அந்த வாதத்திற்கு பயன்படும் ஆபத்தும் உள்ளது. போதைப்பொருட்களில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்குவதால், மிகச்சில மேலோட்டமான ஆராய்ச்சிகளில் முடிவு எடுப்பது ஆபத்தானது.

மாசாசூசெட்சில் 220 பெண்களுக்கு மேல் செய்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் கர்ப்பம் தரித்த பெண்கள், மிகக் குறைவான அளவில் மரிஜூவானா புகைப்பவர்களாக இருந்தனர். அவர்களின் இணையரும் அப்படியே இருந்தனர். இவர்கள் கடந்த காலத்தில் மரிஜூவானா புகைத்த வரலாறு கொண்டவர்களாக இருந்தனர் என்பது முக்கியமானது.


“சோதனைக்குழாய் முறையில் கருவுறுதல் என்பதில் ஆண்களின் விந்து அணுக்கள் எண்ணிக்கை முக்கியமானதல்ல. ஏனெனில் இதில் ஒரே ஒரு அணு மூலம் கருவுறுதல் நடைபெறுகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் இந்த அணுகுமுறை உங்களுக்கு உதவக்கூடும்” என்கிறார் மருத்துவர் நீல் பாரெக்.

நன்றி: லிவ் சயின்ஸ்