கனவில் கொலை - துரத்தும் கொலையாளிகள்- 118 சாகச அனுபவம்!





Image result for 118 telugu movie wiki




118 - தெலுங்கு சினிமா

இயக்குநர் - கே.வி. குகன்
ஒளிப்பதிவு - இயக்குநரே
இசை - சேகர் சந்திரா

Image result for 118 telugu movie poster




மருத்துவ மாஃபியா ஒரு இளம்பெண்ணை கொலை செய்து புதைக்கிறது. அதனை எப்படி இளம் சரி வேண்டாம் வாலிப வயது பத்திரிகையாளர் உலகத்திற்கு தெரிய வைக்கிறார் என்பதுதான் கதை.

தந்தியில் எழுதிவிடும் கதைக்கருதான். ஆனால் எடுத்த விதம் படத்தை அட்டகாசப்படுத்துகிறது. திரில்லர் படத்திற்கான உயிர் எதில் உள்ளது ஒளிப்பதிவில்தானே? கே.வி. குகன் சமரசமின்றி அதற்காக உழைத்திருக்கிறார்.

118 என்ற பாரடைஸ் ஹோட்டல் ரூம்தான் கதைக்களம். அங்கு தங்குபவர்களுக்கு குறிப்பிட்ட நாளன்று ஒரு கனவு வருகிறது. மற்றவர்கள் சாதாரணமாக விட்டுவிடலாம். பத்திரிகையாளர் சும்மா இருப்பாரா? நந்தமூரி கல்யாண் ராம் முதல்முறை விட்டுவிடுகிறார். ஆனால் இரண்டாம் முறை விழித்துக்கொண்டு துப்புதுலக்குகிறார். கூடவே அவரது காதலி, மாமா உதவுகிறார்கள். அப்போதுதான் மரபணுவை மாற்றி சோதனை செய்யும் குழு பற்றி கண்டுபிடிக்கிறார்கள். அதற்குமுன்னே அவர்கள் கல்யாண்ராமை போட்டுத்தள்ள முடிவெடுத்துவிடுகிறார்கள். யார் ஜெயித்தார்கள் என்பதே கதை.
Image result for 118 telugu movie poster




இயக்குநராகவும் , ஒளிப்பதிவாளராகவும் கே.வி.குகன் ஜெயித்து விட்டார். கங்கிராட்ஸ் சார். கல்யாண்ராம் தன் கேரியரில் நடித்தேன் என்று சொல்லிக்கொள்ள ஒரே படம் இது மட்டுமே. இனி மசாலா படங்களைக் குறைத்துவிட்டு இதுபோல நடித்தால் பேரை கிராஃபிக்சில் இன்னும் கூட கலர்கலராக போட்டுக்கொள்ளலாம். தப்பில்லை.

நிவேதா தாமஸ், படம் தொடங்கி வெகுநேரத்திற்கு பிறகுதான் வருகிறார். படம் முடிந்தபிறகும் நினைவில் நிற்பவர் அவர்தான். ஷாலினி பாண்டே எதற்கு? நாயகனுக்கு காதலிக்க உதவ வேண்டுமே அப்பணியை மட்டுமே செய்கிறார். 



Image result for 118 telugu movie poster

சந்தமாமா பாடலில் இசையமைப்பாளர் பெயரை கேட்க வைக்கிறார் சேகர் சந்திரா. மற்றபடி திரில்லர் படங்களுக்கான இசை கிடைக்கிறது.

தெலுங்கு சினிமா வேஸ்ட் என புலம்புபவர்கள் நிச்சயம் கிரிப்பாக எழுதி இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பார்க்கலாம்.


- கோமாளிமேடை டீம்