இ - ஸ்கூட்டர் புதுசு - ஜி30 சந்தையைக் கலக்குமா?
Max G30 e-scooter
பெரிய வண்டிகளை ஓட்டுவதற்கு இவை சிறந்த மாற்று. ஸ்டைலாக கோட்சூட் போட்டு வண்டி எடுத்தாலும் சரி. சிம்பிளாக லீவிஸ் ஜீன்ஸ், போலோ டிஷர்ட் போட்டு இ ஸ்கூட்டர் ஓட்டலாம். பிரமாதமாக இருக்கும்.
நைன்பாட் எனும் சீனக்கம்பெனியின் தயாரிப்பு. இக்கம்பெனி பல்வேறு இ ஸ்கூட்டர்கள், ஸ்கேட்டர்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிமுகப்படுத்தியது நைன்பாட். செக்வே - நைன்பாட் என்ற பெயரில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
மணிக்கு இருபத்தைந்து கி.மீ வேகத்தில் செல்லும் இ ஸ்கூட்டர் இது. இதன் பேட்டரி திறன் 551 wh. 10 அங்குல ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்டது.
இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத இ ஸ்கூட்டர் இது. விரைவில் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.
நன்றி: நியூ அட்லஸ்