சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்!
இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள்.
இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும்.
நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது.
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும். பின்னர், விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் தனியே பிரிந்து செல்லும். இதற்கு 5 நாட்கள் தேவை. இவை, நிலவின் வட்டப்பாதையில் இணைந்து 27 நாட்கள் சுற்றி வந்து அதன் பரப்பில் லேண்டர் பிரிந்து இறங்கும். இதற்கு 4 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம்
1.நிலவின் தூசு புயல்களைச் சமாளித்து தரையிறங்குவது.
2.நிலவில் கிடைக்கும் பொருட்களின் மூலம் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளதாக என உறுதிப்படுத்துவது.
3.நிலவின் வட்டப்பாதை மற்றும் அதன் அமைப்பு பற்றி தீர்க்கமாக அறிவது.
4.சூரியக்குடும்பம் தோன்றியது, பூமியின் தோற்றம் பற்றியும் அறிவது.
"சந்திரயான் 2 நிலவில் ஆராய்ச்சி செய்து அங்கு நீர் கிடைக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும்" என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் ஏஎஸ் கிரண்குமார்.
நன்றி: டைம்ஸ ஆஃப் இந்தியா