டீ குடித்தால் கழிவறை நோக்கி ஒடுகிறீர்களா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
காபி, டீ குடித்தால் உடனே மலம் கழிக்கத் தோன்றுவது ஏன்?
உடனே பீதியாகாதீர்கள். எனக்குக்கூட என் அம்மா வைக்கும் ரசத்தைச் சாப்பிட்ட உடனே பாத்ரூமுக்கு ஓடுவேன். அது குடும்பத்தில் நடக்கும் பழிக்குப்பழி சமாச்சாரம். அதை விடுங்கள். டீ, காபியில் ஏன் அப்படி நடக்கிறது? காரணம் அதிலுள்ள ஊக்கமூட்டிகள் குடலை சற்று நெகிழ வைப்பதுதான். இதனால் உலகிலுள்ள 60 சதவீதம் பேர் காபியை ஆசையோடு குடித்துவிட்டு தலைதெறிக்கும் வேகத்தில் பாத்ரூமில் அடைக்கலமாகிறார்கள். இது தவிர்க்க முடியாது. இதுவே சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும் .இதனை ஆயுர்வேத த்தில் கழிச்சல் நோய் என்பார்கள். இதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
எனவே, டீ, காபியை குறைத்துக்கொண்டால் மலம் வேகமாக வெளியேறும் வேகத்தைக் குறைக்கலாம். உடலிலுள்ள நீரும் இதன் காரணமாக வேகமாக வெளியேறும் என்பதால் கவனம் தேவை.
நன்றி: பிபிசி