நவீன தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டான முதியோர்!



Image result for thayammal,tirupur
தாயம்மாள், திருப்பூர்


சமூகத்திற்கு சேதி சொல்லும் முதியோர்!


சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன் – ஜலஜா ஆகியோருக்கு எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை. இருவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். காலையில் சூரிய உதயம், அஸ்தமனத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.

Image result for vaibhav seva jj foundation
ஜனார்த்தனன்


பென்சன் பணத்தோடு சேமிப்பும் அவர்களை காப்பாற்றி வந்தது. ஆனால் வயதுக்கான தள்ளாமை யாரை விட்டுவைக்கும்? தங்களின் மனதிருப்திக்காக வைபவ் சேவா ஜேஜே பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையைத் தொடங்கி முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தனர். இதனை இருவரும் தங்களது பணி மூப்புக்கு முன்பே தொடங்கி, நடத்தி வந்தனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஜனார்த்தனன் வலது கண் லுக்கோமாவால் பாதிக்கப்பட்டது. ஜலஜா, தவறி விழுந்து முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களால் முதியோர் இல்லத்தைப் பராமரிக்க முடியாமல் போனது. இதனால், முதியோர்களை திரும்ப அவர்களின் பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டு நொறுங்கிய இதயத்தோடு நின்றனர். இன்றும் தங்களது அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்க்கு பண உதவிகள் செய்து வருகின்றனர்.

தாயம்மாள்

தாயம்மாள் திருப்பூரில் எட்டு ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர். பொதுவாக இந்த ஊர்க்கார ர்கள் நிலம் கிடைத்தால் என்ன செய்வார்கள்? பக்கத்து வீட்டுக்காரன் வயிறெரிந்து சாகும்படி பிரமாண்டமான வீட்டைக் கட்டுவார்கள். இங்கதான் தாயம்மாள் வேறுபடுகிறார். அவர், கணவரின் விருப்பப்படி வாங்கிய நிலத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதற்கு உள்ளூர் அறக்கட்டளை ஒன்று உதவியிருக்கிறது. இவரது சேமிப்பு பணம் 5 லட்சரூபாயை செலவழித்து நிலம் வாங்கி கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை செலவழித்து நீர் வசதியைச் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். இதுதான் இறுதிக்காலத்தில் மகிழ்ச்சி அளிக்கும் என்று உறுதியாக பேசுகிறார்.
இவரைப்போலவேதான் இன்னொருவரும் நினைக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஜகன்னானந்தா ஜெனா என்பவர் சுயதொழில் செய்துவருகிறார். இவர், இயற்கை வாழ்க்கையை சரியானது என்கிறார். இயற்கைவழி மருத்துவரான இவர் பத்து ஆண்டுகளாக எந்த மருத்துவரிடமும் சென்றதில்லை என்கிறார். சரி, பல கிராமத்தினர் தங்கள் உணவுமுறை மூலம் இப்படித்தானே இருக்கிறார்கள்.

இவர் சென்னையில் சம்பாதித்த பணத்தை திருவள்ளூரில் உள்ள குப்பத்துபாளையம் என்ற ஊரில் முதலீடு செய்தார். அங்கு முதியோர் இல்லம் ஒன்றைத் தொடங்கி, மனைவியோடு மருத்துவ ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார். “நாங்கள் நகரத்தில் இருந்தது தொழில் சார்ந்த காரணத்தினால்தான். வாழ்க்கை என்பது இங்குதான் உள்ளது. இங்குள்ள மக்களுக்கான மருந்துகளை நாங்கள் தயாரித்து தந்து வருகிறோம். ” என பெருமையாக பேசுகிறார்.
உண்மையில் முதியோர்கள் நவீன தலைமுறைக்கு ஏதோ ஒரு வகையில் செய்தியைக் கடத்திதான் வருகிறார்கள்.

ஆங்கிலத்தில் – சரண்ய சக்ரபாணி

தமிழில்: கார்த்தி

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா