மின்வாகனங்களை ஆளும் ராஜராஜன் - சீனா!- எப்படி ஜெயித்தனர்?




Image result for china byd auto


எதிர்காலத்தை நோக்கி

 பயணிக்கும் சீனா!



Image result for china byd auto charging point


 சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துரித வேகத்தில் பெருமளவு எண்ணிக்கையில் மின்வாகனங்களைத் தயாரித்து வருகின்றன. வெப்பமயமாதல் பிரச்னையோடு உலக அளவில் மாறும் டிரெண்டுகளுக்கு ஏற்ப சீனா தன்னை வேகமாக தகவமைத்து வருகிறது.

 கடந்த ஆண்டில் 9,84,000 கார்களை சீனா விற்றுள்ளது. இது உலகளவில் விற்ற மின்வாகனங்களில் விற்பனையில் பாதிக்கும் அதிகமாகும். சீனாவின் ஜியான் பகுதியைச் சேர்ந்த பைட் ஆட்டோ, 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது மொபைல் போன்களுக்கான பேட்டரிகளைத் தயாரித்தது. பின்னர் மின்வாகனங்களின் விற்பனையில் இறங்கியது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் விற்ற மின்வாகனங்களின் எண்ணிக்கை 2,48,000.

பாரிஸ் சூழல் ஒப்பந்தப்படி, 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு காற்றிலுள்ள கார்பன் மாசைக் குறைக்கும் திட்டத்தை சீனா வகுத்தது. இதற்காக, மின்வாகனத் தயாரிப்பாளர்களுக்கு வரிச்சலுகை அளித்து உதவுகிறது சீன அரசு. மேலும் 3,42,000 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 67,000 தான்.

Image result for china byd auto charging point


2020இல் மின்வாகனங்களின் விற்பனை அளவு 12 சதவீதமாக இருக்கவேண்டுமென சீன அரசு எதிர்பார்க்கிறது. 300 கி.மீ. மேல் மின்வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அரசு மானியத் தொகை (ரூபாயில் 11,00,522) வழங்குகிறது. சீனாவில் பெட்ரோல் கார்களுக்கு நிகராக குறைந்தவிலையில் மின்வாகனங்களைத் தயாரித்து விற்கிறார்கள். காரணம், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதுதான். இதனால் அவற்றின் விலை 8 முதல் 11 லட்சம் என்ற அளவில் உள்ளது.  உள்நாட்டு உற்பத்தியை பசுமை நோக்கில் மாற்றிக்காட்டியுள்ள சீனாவிடம் உலகநாடுகள் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

தகவல்: New Scientist