கம்பீர சிஇஓக்களின் கல்லூரி காலம்! - சுந்தர் பிச்சை முதல் இவான் ஸ்பீகல் வரை
கற்க கசடற!
கீழே நீங்கள் படிக்கப்போகிறவர்கள் அனைவரும் பெரும் நிறுவனங்களை நடத்துகிறவர்கள். ஆனால் அவர்கள் அ, ஆ என்றுதானே தொடங்கியிருப்பார்கள். அப்படி புகழ்பெற்ற நிறுவனத்தின் சிஇஓக்கள் என்ன படித்திருப்பார்கள், என்ன கற்றிருப்பார்கள், எங்கு வேலை செய்திருப்பார்கள் என்று பார்ப்போம்....
சுந்தர்பிச்சை
அப்ளைடு மெட்டீரியல் இஞ்சினியர்.
கூகுளின் இயக்குநரான சுந்தர் பிச்சை எம்எஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலையிலும் எம்பிஏ படிப்பை பென்சில்வேனியா பல்கலையிலும் முடித்தார். பின்னர் அப்ளைடு மெட்டீரியல் நிறுவனத்தில் பொறியாளரானார். பின்னரே 2004 ஆம் ஆண்டில் கூகுளில் பொருட்களின் தயாரிப்புக்கான துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் திறமையால் கவரப்பட்ட ட்விட்டர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய இருநிறுவனங்களும் பொறுப்பை வழங்க முன்வந்தன. ஆனால் வாய்ப்பு கிடைத்த து என்னவோ கூகுளுக்குத்தான். 2015 ஆம் ஆண்டு லாரிபேஜ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதும் சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இயக்குநராக ஆனார்.
ஜெஃப் பெஸோஸ்
பர்கர் விற்பனையாளர்
இன்று உலகம் முழுக்க ஆச்சரியமாக பார்க்கும் அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநர் ஜெஃப் பெஸோஸ். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 131 பில்லியன் டாலர்கள். முதலில் கல்லூரியில் இளங்கலை படித்தபோது மெக்டொனால்டு நிறுவனத்தில் வேலை செய்தார். வேலை என்ன தெரியுமா? மிகப்பெரிய கெட்ச்அப் டிஸ்பென்சரை சுத்தமாக துடைத்து வைப்பதுதான். அன்றைய காலகட்டத்தில் 1980களில் சமையற்கார ர் ஒருவருக்கு மெக்டொனால்டு 2.69 டாலர்களை தினசரி சம்பளமாக வழங்கி வந்தது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி பட்டம் பெற்றபிறகு, ஃபைடெல் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றினார்.
சத்யா நாதெள்ளா
மென்பொருள் பொறியியலாளர்
மைக்ரோசாஃப்டில் இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, சத்யா நாதெள்ளா மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வந்தார்.
1992 ஆம்ஆண்டு மைக்ரோசாஃப்டிற்கான நேர்காணலில் சத்யா பங்கேற்றார். அதில் கணினி சாராத கேள்வி இடம்பெற்றதையும் அவர் கூறினார். குழந்தை ஒன்று கீழே விழுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, நான் அருகிலுள்ள டெலிபோன் பூத்திற்கு சென்று உதவிக்கு போலீசை அழைப்பேன் என்று கூறியிருக்கிறார்.
டிம் குக்
நாளிதழ் விநியோகம்
ஆப்பிளின் இயக்குநரான டிம் குக், சிறுவயதில் தன் பகுதியிலுள்ள வீடுகளுக்கு நாளிதழ்களை விநியோகம் செய்து வந்திருக்கிறார். தான் வாழ்ந்த அலபாமா நகரில் உள்ள காகித ஆலையில் பணியாற்றியிருக்கிறார். வர்ஜீனியாவிலுள்ள அலுமினியம் ஆலையில் பணியாற்றியவர் பின்னரே டெக் உலகில் நுழைந்திருக்கிறார். முதலில் ஐபிஎம்மில் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றியவர், பின்னர் காம்பேக் நிறுவனத்திற்கு மாறினார். 1998 ஆம் ஆண்டு ஆப்பிளுக்கு மாறியவர், 2011 ஆம்ஆண்டு நிறுவனத்தின் இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டார்.
ஷெரில் ஷாண்ட்பெர்க்
தொழுநோய் விழிப்புணர்வு
கல்லூரி முடித்தபிறகு, ஷெரில் உலகவங்கியுடன் இணைந்து பணியாற்றினார். இந்தியாவில் தொழுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதற்குப்பிறகு கிளிண்டன் பதவிக்காலத்தில் கருவூலத்துறையில் வெள்ளைமாளிகையில் பணியாற்றினார். பின்னர், ஃபேஸ்புக்கின் அதிகாரியானார்.
இவான் ஸ்பீகல்
குளிர்பான விற்பனையாளர்
ஸ்னாப்சாட் இயக்குநரான இவான் ஸ்பீகல், ரெட்புல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் மேல்நிலைப்படிப்பை அவர் முடித்திருந்தார். இந்த வேலையில் ரெட்புல் பானத்தை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புரமோட் செய்யவேண்டும்.இதில் அவர் பெரியளவு பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், மக்கள் தொடர்பில் நல்ல அனுபவத்தைப் பெற்றார். இந்த அனுபவங்கள்தான் அவரை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கு அழைத்துச் சென்றது.
நன்றி: இடி பனாசே