ஸ்டார்ட்அப் இளைஞர்களின் சூப்பர் சாதனை!




Image result for lal 10





உலக அரங்கில் சாதிக்கும் இந்தியக் கைத்தறி!

செய்தி: நொய்டாவைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளர்களுக்கு லால் 10 எனும் ஸ்டார்ட்அப் இளைஞர்கள் உதவி வருகின்றனர்.
நொய்டாவைச் சேர்ந்த லால்10 எனும் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த ஸ்டார்ட்அப் இளைஞர்கள், கைத்தறித் தொழிலுக்கு உதவி வருகின்றனர். இதற்கு வாட்ஸ்அப் மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். மனீத் கோகில், சஞ்சித் கோவில், ஆல்பின் ஜோஸ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள்.

2015 ஆம்ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த தொழில்முயற்சியில் 1500க்கும் மேற்பட்ட கைத்தறித் தொழிலாளர்கள், கலைஞர்கள் இணைந்துள்ளனர். சிஆர்எம் எனும் ஆப்பை மேம்படுத்தி, விற்பனை வலைப்பின்னலை வலுப்படுத்தியுள்ளனர்.

 மேலும் தேசிய வடிவமைப்பு கல்லூரி மாணவர்கள்  16 பேர், நடப்பு டிரெண்டுகளைக் கண்காணித்து தகவல் கொடுக்கின்றனர். அதைப்பின்பற்றி உடைகளைக்  கைத்தறித் தொழிலாளர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

”தற்போது எங்களுக்கு மாதம் 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் லால் 10 நிறுவனர்களில் ஒருவரான சஞ்சித். இவர்களுக்கு மேற்குவங்கத்தின் புலியா எனும் குறிப்பிட்ட வகை துணிகளை நெய்வதற்கான ஆர்டர்கள் அதிகம் வருகின்றன. விற்பனை தேவை எனும் முறையில் செயற்பட்டாலும், கைத்தறி தொழிலாளர்களுக்கான நிரந்த வருமானம் என்ற நோக்கத்தில்  உறுதியாக உள்ளனர். இவர்களின் மூங்கில் மற்றும் வாழை நார் இழை ஆடைகள் மக்களைக் கவர்ந்துவருகின்றன.

தகவல்:TH